Aran Sei

மாணவிகள் அல்ல, தேசதுரோகிகள் தான் ஹிஜாபுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர் – பாஜக மூத்த தலைவர் யஷ்பால் சுவர்ணா

வகுப்பறைக்குள் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்ற கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் உடுப்பியைச் சேர்ந்த 6 மாணவிகள் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்குத் தொடுத்த அந்த மாணவிகளை ‘தேசதுரோகிகள்’ என்று மூத்த பாஜக தலைவரும், உடுப்பி அரசு கல்லூரியின் மேம்பாட்டுக் குழுவின் துணைத் தலைவருமான யஷ்பால் சுவர்ணா குற்றம் சாட்டியுள்ளார்.

ஹிஜாப் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு – ஹோலி விடுமுறைக்குப்பின் விசாரிப்பதாக நீதிமன்றம் உறுதி

மார்ச் 15 அன்று ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் அத்தியாவசியமான மத நடைமுறை அல்ல என்று கூறி, ஹிஜாப் வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து அறிக்கை ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், “நீதிமன்றத்திற்கு எதிராக அறிக்கை வெளியிடுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். ஹிஜாபுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளவர்கள் மாணவிகளே அல்ல, அவர்கள் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள், தேசதுரோகிகள்” என்று பாஜகவின் பிற்படுத்தப்பட்டர் அமைப்பின் தேசிய செயலாளரான யஷ்பால் சுவர்ணா குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளுக்கு ஆதரவாக நாடும் முழுவதும் குரல் எழுந்த நிலையில், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

‘ஹிஜாப் அணிவது மதம் சம்பந்தமானது மட்டுமல்ல தனிமனித சுதந்திரம் சம்பந்தமானதும் கூட’ -மெகபூபா முப்தி

கர்நாடக அரசின் தடை உத்தரவை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இறுதி உத்தரவு வரும் வரை கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை அணிந்து வரை இடைக்காலத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்