Aran Sei

‘மியான்மர் அகதிகளின் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது எங்களின் கடமை’ – மிசோராம் அரசு அறிவிப்பு

மிசோராம் அரசு மாநில கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடந்த ஆகஸ்ட் 31 அன்று எழுதியுள்ள கடிதத்தில் “மாநில எல்லைகளைக் கடந்து மியாண்மர் அகதிகளின் குழந்தைகளுக்குப் பள்ளியில் இடமளிக வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளது.

கல்வித்துறை இயக்கநருக்கு எழுதியுள்ள கடித்த்தில் “ 2009 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தின்படி 6 முதல் 14 வயதுடைய சிறார்களுக்குக் கல்வி வழங்குவது அரசின் கடமை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சிறார்களுக்கும் அவர்களின் வயது மற்றும் தொடக்கப்பள்ளி கல்வித்தகுதியைக் கொண்டு சிறார்களைப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

புலம்பெயர்ந்தோர்களின் குழந்தைகளையும் அகதிகளாக்கப்பட்ட சிறார்களையும் பள்ளியின் சேர்த்துக்கொள்ள வேண்டிமென்று மாநிலக் கல்வித்துறையைச் சேர்ந்த மாவட்ட மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மியான்மருக்கு வலுக்கட்டாயமாக அகதிகளான சிறார்களை கடந்த செப்டம்பரில் அனுப்பி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

மியான்மரின் கல்வித்துறை அமைச்சர் லல்ரிஞ்சானா கூறுகையில் “ அவர்கள்( மியானமர் அகதிகள்) எவ்வளவு காலம்  இந்திய மண்ணில் இருக்கிறார்களோ அது வரை அவர்களின் கல்விக்கு உறுதியளிப்பது மாநில அரசின்  கடமை” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்