Aran Sei

‘காவல்வதை சாவுகள் தொடர்வது வெட்கக் கேடு’ – திருமாவளவன் கண்டனம்

காவல்வதை சாவுகள் தொடர்வது வெட்கக் கேடானதாகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சார்ந்த மாணவன் மணிகண்டன் அண்மையில் காவல்துறை விசாரணைக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கீழத்தூவல் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவனை விசாரணை என்னும் பெயரில் தாக்கப்பட்டதனால் தான் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த்தாகவும் மணிகண்டனின் பெற்றோர் தரப்பில் அய்யப்படுகின்றனர்.

முப்படைகளின் தலைமை அதிகாரி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – குன்னூர் அருகே நொறுங்கி விழுந்தது கண்டுபிடிப்பு

தமிழகத்தில் இவ்வாறான காவல்வதை சாவுகள் தொடர்வது வேதனையளிக்கிறது. இது வெட்கக்கேடான ஒன்றாகும். காவல்துறையினரின் இத்தகைய போக்கை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

நல்ல உடல்நலத்துடன் அழைத்துச் செல்லப்பட்ட ஒரு இளைஞன் திடீரென உயிரிழந்திருப்பதற்கு விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளே பொறுப்பாகும். எனவே, அவ்வதிகாரிகள் மீது உடனடியாக துறைசார் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

அத்துடன் சிறப்புப் புலனாய்வு குழுவின் மூலம் உரிய விசாரணை நடத்தி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்.

நாட்டின் 22 % சொத்துக்கள் 1% பேரிடம் குவிந்துள்ளது – பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

காவல் விசாரணயில் பலியான மணிகண்டன் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கவும் ஆவன செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்