Aran Sei

’ரெம்தேசிவிர் மருந்து செலுத்த புதிய விதி: ‘மக்கள் சாக வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது – நீதிமன்றம் குற்றச்சாட்டு

க்சிஜன் தேவைப்படுவோருக்கு மட்டும் ரெம்தேசிவிர் மருத்து பயன்படுத்த வேண்டும் என்ற புதிய விதிகள் விதித்திருப்பதன் மூலம் மக்கள் சாக வேண்டும் என மத்திய அரசு நினைப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

”இது முற்றிலும் தவறானது. சற்றும் யோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் கிடைக்காத மக்களுக்கு இனி ரெம்தேசிவிர் மருந்தும் கிடைக்காது. இதன் மூலம் மக்கள் சாக வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்” என நீதிபதி பிரதிபா எம். சிங் தெரிவித்துள்ளார்.

”இது முற்றிலும் தவறான நிர்வாகம்” என கூறியுள்ள நீதிமன்றம், மருத்து தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை மறைக்க மத்திய அரசு இவ்வாறு புதிய விதிகளை வகுப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

‘ஐபிஎல் ஆறுதலா? குடும்பத்தினர் கொரோனாவால் மரண படுக்கையில் இருந்தால் கிரிக்கெட் ஒரு பொருட்டாக இருக்காது’ – ஐபிஎல்லில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய வீரர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞருக்குத் தேவையான 6 டோஸ் ரெம்தேசிவிருக்கு பதிலாக 3 டோஸ் மட்டுமே வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இதனைத் தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் தலையிட்டபிறகு அவருக்குத் தேவையான எஞ்சிய டோஸ்கள் நேற்றிரவு (ஏப்ரல் 27)  வழங்கப்பட்டன.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்