மனநல காப்பகத்தில் உள்ள பெண்களின் மீதான மனித உரிமை மீறல்கள், அநீதிகள் குறித்து எழுந்துள்ளக் குற்றச்சாட்டுகள் குறித்து மிகுந்த கவனம் கொள்ள வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் கவுரவ் பன்சால் தாக்கல் செய்த இந்த மனுவில், மனநல காப்பகங்களில் உள்ள பெண்களின் துயரமான நிலைக்குறித்து சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும், பன்சால் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், மனநலக்காப்பகத்தில் பெண்களின் கட்டாயமாக தலைமுடியை நறுக்குவது போன்று முறையற்ற தவறான சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும், சானிட்டரி நாப்கின் போன்ற அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, மனநலக் காப்பகத்தில் சிகிச்சைகப் பெற்று வருபவர்களின் நிலையானது மனநலச் சுகாதாரச் சட்டம், 2017 பிரிவு 20 [1] ,பிரிவு 20 [2] மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலத்தின் கண்காணிப்புகே குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டுமெனவும் ஒன்றிய சமூக நலத்துறைக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இதேபோன்று, அடுத்த விசாரணைக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் கூறியுள்ளது.
SOURCE: THE WIRE
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.