Aran Sei

பெகசிஸ் உளவு மென்பொருளை தவறாக பயன்படுத்திய நாடுகள் – சேவையைத் தடை செய்த என்.எஸ்.ஒ நிறுவனம்

பெகசிஸ் உளவு மென்பொருளை உருவாக்கிய  இஸ்ரேலைச் சார்ந்த என்.எஸ்.ஒ நிறுவனம், பல நாட்டு அரசுகளுக்கான  பெகசிஸ் உளவு மென்பொருளின் சேவையை நிறுத்தியுள்ளதாக அமெரிக்காவைச் சார்ந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பெகசிஸ் உளவு மென்பொருள் வழியாகப் பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல்தலைவர்கள்உளவு பார்க்கப்பட்டது தொடர்பாகப் பத்திரிகை நிறுவனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதின் எதிரொலியாக இந்தத் செயல்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அழுகுரலின் நெடுங்கதை – கொரோனா காலமும் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர்களும்

“சில வாடிக்கையாளர்கள் மீது விசாரணை நடத்தப்படவுள்ளதால்,  அந்த வாடிக்கையாளர்களுக்கான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது,” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாக தேசிய பொது வானொலி கூறியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள  என்.எஸ்.ஒ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், நிறுவனம் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்கி வருகிறது என்று  தெரிவித்துள்ளார்.

பொருளாதரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது – திருமாவளவன்

மேலும்,  பெகசிஸ் உளவு மென்பொருளை தவறாக பயன்படுத்தியது  தொடர்பாக கண்டறியப்பட்ட நிலையில் என்.எஸ்.ஒ நிறுவனம் 5 அரசு நிறுவனங்களின் சேவையை  நிறுத்தியதாகவும், அதில் கடந்த இரண்டு வருடத்தில்  2 அரசு நிறுவனங்களுக்கான சேவையை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக  ஐக்கிய அரபு அமீரகம்,  சவுதி அரேபியா, துபாய், மெக்சிகோ ஆகிய நாடுகளின் அரசுகளுக்கு பெகசிஸ் உளவு மென்பொருள்  சேவையை  என்.எஸ்.ஒ நிறுத்தியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தியில்  குறிப்பிட்டுள்ளது.

source; THE HINDU 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்