Aran Sei

இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நட்பு ஆழமானது – பிரதமர் நஃப்தலி பென்னட்

ஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் ஆழமான நட்பு உள்ளது என்றும் வலுவான நட்புக்காகவும் ஆழமான அர்ப்பணிப்புக்காகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் இஸ்ரேல் நாட்டு பிரதமர் நஃப்தலி பென்னட் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, நஃப்தலி பென்னட் வெளியிட்டுள்ள காணொளியில், “இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு முடிவற்று இருக்கும். இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் வலுவாக உள்ளது. மேலும் அவை வலுவாக வளரவே செய்யும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“இந்திய மக்கள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்று உள்ளது. இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் ‘கெஹ்ரி தோஸ்தி’ (ஆழமான நட்பு) உள்ளது. இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 30 ஆண்டுகால இராஜதந்திர உறவுக்கு இன்று நாம் மரியாதைச் செலுத்துவோம். முப்பது ஆண்டுகால அற்புதமான கூட்டணி, ஆழமான பண்பாட்டுத் தொடர்பு மற்றும் இராணுவ, பொருளாதார ஒத்துழைப்பு இது” என்று நஃப்தலி பென்னட் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – விவசாயிகள், எல்லைப் பிரச்சினை, பெகசிஸ் குறித்து பேச காங்கிரஸ் திட்டம்

1950ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி, இந்தியா அரசு இஸ்ரேலை அங்கீகரித்திருந்தாலும், இரு நாடுகளுக்கு இடையிலான முழு அளவிலான இராஜதந்திர உறவுகள் 1992ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதிதான் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தாண்டு, இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவு நிறுவப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

“இந்த வலுவான மற்றும் தீர்கமான நட்பிற்கு காரணமான எனது அன்பு நண்பரான பிரதமர் மோடியின் தலைமைக்கும் ஆழ்ந்த அர்ப்பணிப்பிற்கும் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நம்முடைய நாடுகள் அளவில் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் பலவற்றில் நமக்கு ஒற்றுகைகள் உள்ளன. நமது வளமான வரலாறு, நமது மக்களின் உள்ளார்ந்த அன்பு மற்றும் நமது அதிநவீன கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பங்களும் என ஒற்றுமை நிறையவுள்ளது” என்று இஸ்ரேல் நாட்டு பிரதமர் நஃப்தலி பென்னட் அக்காணொளியில் கூறியுள்ளார்.

Source: The Hindu

பெகசிஸ் செயலி குறித்த முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள அரண்செய் சிறப்பிதழை (உளவுக்குதிரை) படிக்கவும். இணைப்பு கீழே.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்