காசா பகுதியில், இஸ்ரேலியப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஏறத்தாழ 21 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஜெருசலேம் மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய படையினர் தாக்குதல் – 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயம்
நேற்று (மே 10), ஜெருசலேமில் உள்ள அல்- அகிசா மசூதிக்குள் இஸ்ரேலிய படையினர் நடத்திய நடத்திய தாக்குதலில், பத்திரிகையாளர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, தெற்கு இஸ்ரேல் பகுதி மீது ஹமாஸ் படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
مراسلتنا: اندلاع مواجهات في بلدات الداخل الفلسطيني المحتل بعد مسيرات نصرة للقدس وتضامنا مع #غزة pic.twitter.com/orKbYIdwo4
— صوت الأقصى – عاجل (@Alaqsavoice_Brk) May 10, 2021
மேலும், அல்- அகிசா மசூதியில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் படையினர் நடத்திவரும் வன்முறையை கைவிடவேண்டும் என்றும் ஹமாஸ் எச்சரித்திருந்தது.
பாலஸ்தீனர்களை அச்சுறுத்தும் யூத பயங்கரவாதிகள் – கிராமங்களை விட்டு வெளியேற்றும் கொடுமை
இந்நிலையில், ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு, “யார் எங்களை தாக்கினாலும் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
While the Israeli war planes continue to target civilians in #Gaza Strip, Israeli forces have attacked, once again, the Palestinian worshippers at al-Aqsa Mosque. Several injuries are currently locked inside the prayer halls.#Jerusalem #المسجد_الأقصى #الأقصى #القدس pic.twitter.com/SPK2QWUZsQ
— Quds News Network (@QudsNen) May 10, 2021
இந்நிலையில், ஹமாஸ் படையினரின் 130 தளங்களின் மீது இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாவும் இஸ்ரேலியப் படையினர் அறிவித்துள்ளனர். இந்த தாக்குதலில், குழந்தைகள் உட்பட 21 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாப் பகுதியில் இன்று அதிகாலை ( மே 11) வரை, இஸ்ரேலியப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜெருசலேமில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை குறித்து, ஐ.நா.பாதுகாப்புக் குழு அவசரக் கூட்டடமொன்றை நடத்தியுள்ளது.
Source: AL-JAZEERA
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.