Aran Sei

ஜெருசலேம் மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய படையினர் தாக்குதல் – 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயம்

ஜெருசலேம் நகரில் உள்ள அல் – அகிசா மசூதி வளாகத்தில், இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளனர்.

கடந்த 1967ஆம் ஆண்டு ஜெருசலேம் பழைய நகரத்தில் அமைந்துள்ள கிழக்கு ஜெருசலேமை, இஸ்ரேல் ஆக்கிரமித்ததை கொண்டாடும் நிகழ்வாக, ஆண்டுதோறும் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இஸ்லாமிய வெறுப்புணர்வு

இந்நிலையில், நேற்று (மே 10), கிழக்கு ஜெருசலேமில் நடந்த கொடி அணிவகுப்பின் போது, பாலஸ்தீனர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியின் வழியாக, தீவிர வலதுசாரி யூதர்கள் செல்ல திட்டமிட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது.

இந்தக் கொடி அணிவகுப்பு ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது வேறு பாதை வழியாகச் செல்ல வேண்டும் என்று பாலஸ்தீன மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல் காரணமாக, நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் காயமடைந்துள்ளனர்.

பாலஸ்தீனத்தின் தெற்கு ஹெப்ரான் – இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படைகளால் மீண்டும் மீண்டும் இடிக்கப்படும் வீடுகள்

இஸ்ரேலிய படையினர், ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் அதிக ஒலியெழுப்பும் குண்டுகளாலும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலின் போது 6 பத்திரிக்கையாளர்கள் மூச்சுத்திணறல் பிரச்சனைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பாத்திமா அல் பாக்ரி என்ற பத்திரிகையாளரை இஸ்ரேலிய படையினர் கடுமையாக தாக்கியும் உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள செம்பிறை சங்கம், “பத்திரிகையாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். 50 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

Source: Al-Jazeera, BBC

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்