Aran Sei

யூத தேசியவாதிகளின் ஜெருசலேம் பேரணிக்கு இஸ்ரேல் அனுமதி : பாலஸ்தீனத்தை மீண்டும் சூழுகிறதா போர்மேகம்?

ஜெருசலேம் வழியாக, யூத தேசியவாதிகள் பேரணியாக செல்ல, இஸ்ரேல் அரசு அனுமதியளித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், வரும் ஜூன் 15 அன்று, இந்த பேரணி நடைபெறும் என்று நேற்றைய தினம் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: உளவியல் சிக்கலால் அவதியுறும் குழந்தைகள்

இந்த அறிவிப்புக்கு ஒருநாள் முன்னதாக,கிழக்கு ஜெருசலேம் மற்றும் அல்-அகிசா மசூதி வழியே வரும் ஜூன் 11 அன்று நடைபெறவிருந்த இந்த பேரணியை ஹமாஸ் படையினரின் எதிர்ப்பை அடுத்து ஒருங்கிணைப்பாளர் குழு ரத்து செய்து அறிவித்திருந்ததாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த வாரம், இந்த பேரணி நடைபெறும் என்றும், காவல்துறையினர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களின் ஒப்புதல் அடிப்படையில் நடைபெறும் என்றும் இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக போராடிய பாலஸ்தீனர்கள் கைது – 1550 பேரைக் கைது செய்துள்ளதாக இஸ்ரேல் தகவல்

இதுகுறித்து தெரிவித்துள்ள, ஹமாஸ் படையின் மூத்தத்தலைவர் கலீல் அல் ஹய்யா, கடந்த மாதம் மே 10 அன்று தொடங்கிய இஸ்ரேலிய தாக்குதலை குறிப்பிட்டு, “வரும் வியாழக்கிழமை கடந்த ஜூன் 10 போல இருக்காது என்றும் நம்புகிறேன்” என தெரிவித்திருந்ததாகவும் அல்-ஜசீரா செய்தி தெரிவிக்கிறது.

எகிப்தின் கோரிக்கையை ஏற்று தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல் -11 நாட்களாக நடந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி- பாலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி

கடந்த மாதம், இசுரேலியப் படையினருக்கும் ஹமாஸ் படையினருக்கும்  நடந்த  11 நாள்  தாக்குதலில், 66 குழந்தைகள் உட்பட 254 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது கவனிக்கத்தக்கது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்