Aran Sei

ஆக்கிரமிப்புக்கு எதிராக நடந்த பாலஸ்தீன மக்களின் போராட்டம் – இஸ்ரேலிய இராணுவத்தினர் தாக்கியதில் 24 பாலஸ்தீனர்கள் காயம்

பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலியப் படையினர் நேற்றைய தினம் நடத்தியத் துப்பாக்கி சூட்டில்  ஒரு சிறுவன் உள்ளிட்ட 24 பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர்.

பாலஸ்தீன் மீதான இஸ்ரேல்- எகிப்திய முற்றுகையைக்(blockade ) கண்டித்து கடந்த  ஆகஸ்ட் 21 அன்று ஹமாஸ் படையினர் ஒருங்கிணைத்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீதான  முற்றுகையை கைவிடவும்,  கடலோரப் பகுதியில் அண்மையில் இஸ்ரேல் நடத்திய 11-நாள் தாக்குதலை அடுத்து  காசாப்பகுதியை புனரமைக்கக் கோரியும் இந்தப்போராட்டம் நடந்தது. 

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட எண்ணற்ற பாலஸ்தீனர்கள் எல்லைப் பகுதி வேலியை நோக்கி சென்று, அங்கிருந்த இஸ்ரேலிய இராணுவத்தினர் மீது கற்கள் மற்றும் வெடிப்பொருட்களை வீசத்தொடங்கியதை அடுத்து அந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த சம்பவத்தின்போது ஒரு  இஸ்ரேலிய எல்லை காவல்படை அதிகாரிக்கு பலத்த காயமேற்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம்,  ஹமாஸ் படையினருக்கு சொந்தமான நான்கு ஆயுத சேமிப்பு மற்றும் உற்பத்தி கிடங்கின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், பாலஸ்தீன் எல்லைப்பகுதியில் கூடுதல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னேட், இஸ்ரேல் இராணுவத்தினர் மற்றும் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு தக்க பதிலடிக் கொடுப்போம். ராணுவம் எதற்கும் தயாரக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

source: தி இந்து

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்