Aran Sei

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் : குழந்தைகள் மருத்துவமனை சேதம்

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஆறு வயது சிறுமி உட்பட, இரண்டு பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக அல்-ஜசீரா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையேயான போர், 2007 ஆம் ஆண்டு காசாவை ஹாமாஸ் எனும் அமைப்பு கைப்பற்றியதில் இருந்து தீவிரமானதாக மாறியது.

சீனா மற்றும் பாகிஸ்தானுடன் போர் செய்ய மோடி முடிவு : உ.பி பாஜக தலைவர்

கடந்த செப்டம்பர் மாதம், ஹமாஸ் அமைப்பும், இஸ்ரேலுக்கும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றினாலும், தொடர்ந்து இரு நாட்டினருக்கும் இடையே தாக்குதல்கள் நடந்தபடியே இருந்தன.

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிற்கு இடையேயிருந்த வன்முறை பெரியளவில் வெடிக்கத் தொடங்கியது. இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்றவில்லை என்று ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியது என்கிறது அல்-ஜசீரா. 

மாயத்திரை: ஒரு பண்பாட்டுப் போர் – இரா.முருகவேள் எழுதும் தொடர்

இந்நிலையில், சனிக்கிழமை அன்று, இஸ்ரேலின் போர் விமானங்கள் காசாவின் கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஏவுகணைகளை செலுத்தி தாக்கியுள்ளதாக பாலஸ்தீன் செய்தி நிறுவனமான வாஃபா தெரிவித்துள்ளது. இதில் ஆறு வயது சிறுமியும், இருபதுகளில் உள்ள ஒரு இளைஞனும் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் முடிவில்லா போர் : 3.7 கோடி மக்கள் இடம்பெயர்வு

இந்த தாக்குதலால், காசாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லம் ஒன்றும் சேதமடைந்துள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்