Aran Sei

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 31 குழந்தைகள் உட்பட 113 பாலஸ்தீனர்கள் மரணம் : தரைவழியாகவும் தாக்க இஸ்ரேல் திட்டம்

ஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே உலக நாடுகள் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும்நிலையிலும்,  இஸ்ரேல் படை பாலஸ்தீனத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக அல்-ஜசீரா  செய்தி வெளியிட்டுள்ளது.

பாலஸ்தீன, இஸ்ரேல் யுத்தமும் அதன் பின்னணியும் – சூர்யா சேவியர்

மேலும், இன்று (மே 14) வரை இஸ்ரேலியப் படையினர் நடத்திய தாக்குதலில் 31 குழந்தைகள் உட்பட 113 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலியப் படையினர் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேலிய படையினரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை இஸ்ரேலியப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 580-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அல்-ஜசீரா  செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் – குர்ஆன் வாசனத்தை மேற்கோள்காட்டிய யுவன்சங்கர் ராஜா

அதுமட்டுமல்லாது, தெற்கு லெபனான் பகுதியில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாலஸ்தீனத்தின் அல்-பி-ரெஹ் நகரின் மேற்கு பகுதியில் நடத்தப்பட்ட கொடுரமான தாக்குதலைத் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அல்-ஜசீரா  தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்