Aran Sei

காசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்?

ஸ்ரேலிய படையினர் காசாப் பகுதியில், மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது

இதுகுறித்து, தெரிவித்துள்ள இஸ்ரேலிய ராணுவம், ஹமாஸ் படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் “எல்லாவற்றிற்கும் தயாராக உள்ளோம், குறிப்பாக காசாப் பகுதியில் தொடரும் பயங்கரவாதத்திற்கு எதிராக மீண்டும் தாக்குதலை மேற்கொள்ளவும் உள்ளோம்” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், காசா பகுதியிலிருந்து தெற்கு இஸ்ரேல் பகுதியில் நடத்தப்பட்ட தீ உண்டாக்கூடிய பலூன் தாக்குதலுக்கு பிறகு இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், இதனால் 20 இடங்களில் தீ பற்றியுள்ளதாகவும் அல்ஜசீரா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலஸ்தீன பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபடும் இஸ்ரேலியப் படையினர்- 2 பாதுகாப்பு படையினர் உட்பட மூன்று பாலஸ்தீனர்கள் மரணம்

இந்நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 15 அன்று, ஜியோனிச தேசியவாதிகளின் கொடி பேரணிக்கு இஸ்ரேல் அரசு அனுமதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலியப் படையினரின் தாக்குதலில் 149 பாலஸ்தீனர்கள் பலி – இஸ்ரேல் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஆதரவு

இதனைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய டமாஸ்கஸ் கேட் பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் காவல்துறை வெளியேற்றிருந்தது. மேலும், இந்த நடவடிக்கையின்போது 17 பாலஸ்தீனர்களை கைது செய்யப்பட்டதாகவும்,33 பாலஸ்தீனர்கள் காயமடைந்ததாகவும் அல் ஜஷீரா செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொடி அணிவகுப்பில் பங்கேற்ற யூத தேசியவாதிகள் “அரேபியர்களுக்கு மரணம்”, “உங்கள் கிராமங்கள் எரிக்கப்படும்” என்று முழக்கமிட்டவாறு ஊர்வலமாக சென்றதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஹமாஸ் படையின் செய்தி தொடர்பாளர்,பாலஸ்தீனர்கள் தங்கள் உரிமைகளையும், புனித தலங்களையும் பாதுகாக்க துணிச்சலான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்களென ஹமாஸ் படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்