Aran Sei

கொரோனா அதிகரிப்பதால் இந்தியாவிற்கு பயணிக்கத் தடை- இஸ்ரேல் அரசு அறிவிப்பு

கொரோனா இரண்டாம் அலையில் இந்தியா கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருவதால் இந்தியாவிற்கு பயணம் செய்ய இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அந்நாட்டு அரசு,”உக்ரைன் பிரேசில், எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, மெக்சிகோ மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இஸ்ரேலியர்கள் அந்நாடுகளுக்கு செல்லத் தடைவிதிப்பதாக அறிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை பரவல்: ‘தூங்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறோம்’ – வெளியுறவுத்துறை அமைச்சகம்

இந்த அறிவிப்பு மே 3 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டு மே 16 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது மேற்குறிப்பிட்ட நாட்டின் விமானநிலையங்களில் மற்ற நாட்டு விமானங்களுக்காக 12 மணிநேரம் காத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது.

‘தவறான அரசியலும் தவறான ஆட்சியும்தான் மருத்துவரின் உயிரிழப்புக்கு காரணம்’ – இந்திய மருத்துவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கருத்து

மேலும், உக்ரைன், பிரேசில், எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, மெக்சிகோ மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து இஸ்ரேல் திரும்புபவர்கள் 2 முறை கொரோனா பரிசோதனையும், பின்னர் 10 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டுமெனவும் இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

source; the hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்