Aran Sei

இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக போராடிய பாலஸ்தீனர்கள் கைது – 1550 பேரைக் கைது செய்துள்ளதாக இஸ்ரேல் தகவல்

ஸ்ரேலியப்படையினர் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டபோது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரேலியப் பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனர்களை கைது செய்யவுள்ளதாக இஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளதாக அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

எகிப்தின் கோரிக்கையை ஏற்று தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல் -11 நாட்களாக நடந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி- பாலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி

மேலும், கடந்த மே 9 வரை 1550 பாலஸ்தீனர்களை கைது செய்துள்ளதாகவும், இந்த கைது நடவடிக்கை தொடரும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

இதுகுறித்து தெரிவித்துள்ள இஸ்ரேல், நகரங்களில் கடந்த இரண்டு வாரமாக போராடிய போராட்டக்காரர்களைக் கைது செய்யவுள்ளதாக கூறியுள்ளதாகவும் அல்-ஜசீரா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலஸ்தீனர்கள் கேட்பது சுய உரிமையையும் சொந்த நாட்டையும்தான் – தென் ஆப்பிரிக்கா குடியரசு தலைவர் கருத்து

மேலும், ஆயிரக்கணக்கான இஸ்ரேலியப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பாக பாலஸ்தீனர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் நடத்தப்படுவதாகவும், இஸ்ரேலின் மக்கள் தொகையில் 20% பாலஸ்தீனர்கள் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நடத்திவரும் மனிதஉரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் – சர்வதேச நீதிமன்றத்திற்கு பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம்

இதுகுறித்து தெரிவித்துள்ள இஸ்ரேலில் அரபு சிறுபான்மையினருக்கான சட்ட உரிமைகள் அமைப்பின் தலைவர் ஹாசன் ஜாபரின், “இந்த நடவடிக்கை பாலஸ்தீன போராட்டக்காரர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது இஸ்ரேல் நடத்தும் போர்” என்று கூறியுள்ளதாக அல்-ஜசீரா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்