Aran Sei

எகிப்தின் கோரிக்கையை ஏற்று தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல் -11 நாட்களாக நடந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி- பாலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி

ஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருதரப்பும் எகிப்தின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதாக அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை இஸ்ரேலியப்படையினர் நடத்தியத் தாக்குதலில் 65 குழந்தைகள் உட்பட 232 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

இறந்த தாயின் அருகில் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட 5 மாதக்குழந்தை – இஸ்ரேல் தாக்குதலின் பேரவலம்

இதேபோன்று, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அல்-ஜசீரா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எகிப்தின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு தாக்குதலை நிறுத்தி வைப்பது குறித்து தெரிவித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு,” நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கான எகிப்திய முன்முயற்சியை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

இஸ்ரேல் நடத்திவரும் மனிதஉரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் – சர்வதேச நீதிமன்றத்திற்கு பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம்

இந்நிலையில், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கைகள் நிறுத்தி வைப்பதை அறிவித்ததை அறிந்த எண்ணற்ற பாலஸ்தீன மக்கள் தெருக்களில் பாலஸ்தீனக் கோடியை ஏந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அல்-ஜசீரா செய்தியில் தெரிவித்துள்ளது.

இருதரப்பும் தாக்குதலை நிறுத்திவைப்பது குறித்து தெரிவித்துள்ள எகிப்து பிரதமர் அல்-சிசி, “நான் எனது வாழ்த்துகளை அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு தெரிவித்துக்கொள்கிறேன், எகிப்தின் அமைதி ஒப்பந்தத்தில் அவரின் பங்கு மிக முக்கியமானதாகும்” என்று கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டடத்தில் இருந்து வெளியேற 10 நிமிடம் அவகாசம் கேட்ட மக்கள் – கோரிக்கை பொருட்படுத்தாது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம்

சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா அரசு இஸ்ரேல் ஆயுதம் விற்க இருப்பதாக அறிவித்திருந்ததற்கு ஆம்னெஸ்டி அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்