Aran Sei

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை – உண்மையை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளருக்கு விருது

ணையதள புலனாய்வு செய்திக்கான ‘லாட்லி’ விருதை (Laadli), தி வயர் இணையதளத்தின் செய்தியாளர் இஸ்மத் ஆரா பெற்றுள்ளார்.

உத்தரபிரேத மாநிலம் ஹத்ராசில் 2020ஆம் ஆண்டு பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது பெண் ஆதிக்க சாதியினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் உயிரிழந்த வழக்கு குறித்த செய்தியை புலனாய்வு செய்து வெளியிட்டதற்காக இந்த விருது இஸ்மத் ஆரா-வுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹத்ராஸ் பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று உத்தரபிரதேச காவல்துறை கூறிவந்த நிலையில், அலிகரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில், பாதிக்கப்பட்ட பெண்ணை முதலில் பரிசோதித்த மருத்தவரின் அறிக்கையை இஸ்மத் ஆரா வெளியிட்டார்.

அந்த மருத்துவ அறிக்கையில், ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, உத்தரபிரதே காவல்துறை பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்று கூறியது தவறு என்று நிரூபணமானது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட பிறகு, சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், பாதிக்கப்பட்ட பெண் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கொடுத்த வாக்குமூலத்தை, காவல்துறை கணக்கில் எடுத்துக்கொள்ளாதது சுட்டிக்காட்டப்பட்டது.

விருதைப் பெற்ற இஸ்மத் ஆரா “பாதிக்கப்பட்ட ஹத்ராஸ் பெண்ணின் இடத்தில் நான் என்னையே வைத்துப் பார்த்தேன்” என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

இதேபோல், பத்திரிகையாளர்கள் சுபிக்ஷா மனோஜ், பாரதி கண்ணன் ஆகியோருக்கும் மாதவிடாய் பிரச்சனை மற்றும் மன நலம் தொடர்பான செய்திகளை வெளியிட்டதற்காக லாட்லி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்