Aran Sei

காஷ்மீரி பண்டிட்டுகளின் நிலை அசாம் மக்களுக்கு ஏற்படாது என்று இஸ்லாமியர்கள் உறுதி கூற வேண்டும் – அசாம் முதல்வர்

காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு ஏற்பட்ட மோசமான நிலை அசாம் மக்களுக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இஸ்லாமியர்களுக்கு உள்ளது என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

இளைஞர்களை தவறாக வழிநடத்தும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பிரதமரே விளம்பரப்படுத்தலாமா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

அண்மையில் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைக் குறிப்பிட்டு அசாம் சட்டமன்றத்தில் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா இவ்வாறு கூறியுள்ளார்.

“தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை குறிப்பிட்டு 10 ஆண்டுகளில் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு நேர்ந்த கதியை அசாமிய மக்கள் சந்திப்பார்களா? என்ற கேள்வி என்னிடம் கேட்கப்படுகிறது. காஷ்மீர் போல அசாம் மாறாது என உறுதியளிப்பது இங்கு வாழும் இஸ்லாமியர்களின் கடமையாகும்” என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

அசாமில் உள்ள மற்ற அனைவரையும் விட இஸ்லாமியர்கள் 35% என்ற அளவில் பெரும்பான்மையினராக உள்ளனர். ஆகவே இங்குள்ள சிறுபான்மையினரான பழங்குடியினரின் நிலங்கள் இஸ்லாமியர்களால் அபகரிக்கப்படுமோ என்ற அச்சத்தில் வாழ்வதாகவும், பழங்குடியினரின் அச்சத்தை போக்குவது இஸ்லாமியர்களின் கடமையாகும் என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

பாஜக அமைச்சரின் மகனால் கொல்லப்பட்ட விவசாயிகள் குறித்து ‘லக்கிம்பூர் ஃபைல்ஸ்’ என படம் எடுக்க வேண்டும் – அகிலேஷ் யாதவ்

இஸ்லாமியர்கள் தங்களை வெளியாட்களாக நினைப்பதைக் கைவிட்டு விட்டு அனைவரிடமும் ஒன்றிணைந்து மத நல்லிணக்கத்தில் ஈடுபட வேண்டும் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்