Aran Sei

கேரளாவில் கிருஷ்ணர் படங்களை வரையும் இஸ்லாமியப் பெண் – கோயிலுக்குள் அழைத்து மரியாதை செய்த இந்துக்கள்

கேரளாவைச் சேர்ந்த 28 வயது இஸ்லாமிய பெண்மணியான ஜாஸ்னா சலீம், பத்தனம்திட்டா மாவட்டம் பந்தலம் அருகே உள்ள உலநாடு ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், அவர் வரைந்த ஓவியத்தை அவரது கையால் திறந்து வைத்துள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக கிருஷ்ணர் ஓவியங்களை வரைந்து வருவதாகவும், இதுவரை 500க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து பரிசளித்திருப்பதாகவும் ஜாஸ்னா தெரிவித்துள்ளார்.

”கிருஷ்ணர் ஓவியத்தை வீட்டில் வைத்திருக்க முடியாது என்பதால், வீட்டிற்கு அருகில் இருக்கும் நம்பூதிரி குடும்பத்திற்கு அன்பளிப்பாக அளித்து விட்டேன். அந்தப் புகைப்படத்தை அவர்களின் பூஜையறையில் அவர்கள் வைத்துள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிறித்துவ வன்னியர்களின் உரிமைக்கு எதிரான படமா ருத்ர தாண்டவம்? – சந்துரு மாயவன்

”இஸ்லாமிய பெண் இந்து கடவுளை வரையும் தகவல் வேகமாக பரவத் தொடங்கியதும். பலரும் அவர்களுக்கு ஓவியம் வரைந்து கொடுக்க சொல்லி கேட்ட தொடங்கினர். கேரளா மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களில் இருந்தும் ஓவியங்களுக்கான ஆர்டர் வருகிறது.” என அவர் கூறியுள்ளார்.

குருவாயூர் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஓவியம் வரைந்து தருவதை வழக்கமாக கொண்டு இருப்பதாக கூறும் ஜாஸ்னா சலீம், “குருவாயூர் கோவிலுக்கு இந்த ஆண்டு ஜன்மாஸ்டமியின்போது வழங்கிய ஓவியத்தைப் பார்த்து. உலநாடு கோவிலுக்கும் வரைந்து கொடுக்கச் சொல்லி ஆர்டர் வந்தது. நான் வரைந்து ஓவியத்தை திறக்கக் கோவிலுக்கு அழைக்கப்பட்டேன். என் வாழ்நாளில் ஒரு இந்து கோவிலுக்குச் சென்றுதும், அங்கிருக்கும் சிலையைப் பார்த்ததும் இது தான் முதல் முறை” என தெரிவித்துள்ளார்.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்