Aran Sei

கோயிலில் தண்ணீர் குடித்ததற்காக தாக்கப்பட்ட இஸ்லாமிய சிறுவர் – #sorryAsif ஹேஷ்டாக் மூலம் சிறுவனுக்கு துணைநிற்கும் மக்கள்

த்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு இந்து கோவிலுக்குள் சென்று தண்ணீர் குடித்ததற்காக இரக்கமின்றி தாக்கப்பட்ட இஸ்லாமிய சிறுவனிடம் கூட்டு மன்னிப்பு கேட்டு நெட்டிசன்கள் ஒன்றிணைந்துள்ளனர். #sorryAsif என்கிற ஹேஷ்டாக் தற்போது ட்விட்டரில் ட்ரண்டாகி வருகிறது.

#SorryAsif என்கிற ஹேஷ்டாக் பயன்படுத்தி  மன்னிப்பு கோரியவர்களில் தலித் உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர் ஸ்வாரா பாஸ்கர் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜாஷ்வி யாதவ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

ஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு – இந்தியாவின் ஆதரவை கோரும் இலங்கை அதிபர்

பீகாரைச் சேர்ந்த ஷிரிங்கி நந்தன் யாதவ் என்பவரால் ஆசிப் இரக்கமின்றி அடித்து வீசப்பட்ட காணொளி ட்விட்டரில் ட்ரெண்டாகி பலரின்  சீற்றத்தைத் தூண்டியது. அந்த வீடியோவில், கோயிலில் தண்ணீர் குடித்த சிறுவனை, யாதவ் சிறுவனிடம் பெயரைக் கேட்பதற்காக கைகளைத் தோளில் போட்டு அக்கறையோடு பேசுகிறார். சிறுவன் தனது பெயர் ஆசிப் என்றும், தந்தையின் பெயர் ஹபீப் என்றும் பதிலளித்திருந்தார்.

இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் காலமானார் – மார்க்ஸின் நினைவு நாளில் மறைந்த மார்க்ஸின் மாணவர்

சிறுவன் இஸ்லாமியர் என்று அறிந்தவுடன் யாதவ், சிறுவனைக் கடுமையாகத் தாக்குகிறார்.  காசியாபாத் காவல்துறை குற்றம் செய்த யாதவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய சட்டம் நிறைவேற்றப்படும் : திருத்தம் செய்யப்பட்ட தேர்தல் அறிக்கை

சந்திர சேகர் ஆசாத்தின் பீம் ஆர்மி உறுப்பினர்கள், ஆசிப்பின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.  #SorryAsif என்கிற ஆஷ்டேக்கை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள பலர், அச்சிறுவனுக்காக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

Source : india today

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்