Aran Sei

குஜராத் போலி என்கவுண்டர் வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய மாநில அரசு அனுமதி மறுப்பு

குஜராத் மாநிலத்தில் 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற போலி  என்கவுண்டர் வழக்கில் குற்றம்சட்டப்பட்டிருக்கும் குஜராத் மாநில காவல்துறை அதிகாரிகள்மீது வழக்குத் தொடர் அம்மாநில அரசு அனுமதி மறுத்திருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சிறப்பு நீதிபதி வி.ஆர். ராவல் உத்தரவின் பேரில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஜி.எல். சிங்கால், தருண் பரோத், அனஜூ சௌத்ரி ஆகியோர் மீது வழக்கு தொடர சிபிஐ அனுமதி கோரியிருந்தது.

குற்றவியல் நடைமுறை சட்டம் 197வது பிரிவுன் படி அரசு அதிகாரிகளின் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு மாநில அரசின் அனுமதி அவசியமாகிறது.

’எத்தனை காலத்திற்கு இடஒதுக்கீடு தொடரும்’: உச்சநீதிமன்றத்தின் கேள்வி அடிப்படையில் தவறானது – வழக்குரைஞர் ராஜசேகரன்

”குற்றம் சாட்டப்பட்ட 3 பேர்மீது வழக்கு தொடர குஜராத் அரசு அனுமதி மறுத்துள்ளது. இதை நாங்கள் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம்” என சிறப்பு வழக்குரைஞர் ஆர்.சி.கோடேகர் தெரிவித்தார்.

ஜூன் 15, 2004 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், 19 வயதான மும்பை சேர்ந்த இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் என்கிற பிரனேஷ் பிள்ளை, அம்ஜதலி அக்பரலி ராணா, ஜீஷன் ஜோஹர் ஆகியோர் குஜராத் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

இவர்கள் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்யத் திட்டமிட்ட தீவிரவாதிகள் என குஜராத் காவல்துறை குற்றம்சாட்டியது. ஆனால், குஜராத் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில், இந்த என்கவுன்ட்டர் போலியானது என தெரியவந்தது.

Source : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்