Aran Sei

போலி என்கவுண்டர் வழக்கு: ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் பாஜக அரசு

ரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது அவரைக் கொல்ல முயன்றார்கள் என்று போலி என்கவுண்டரில் 4 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 காவல்துறை அதிகாரிகளைச் சிறப்பு நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாக 19 வயதான இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேர் கொல்லப்பட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கலவரத்துக்கு ஒரு ஆண்டுக்குப் பிறகும் தொடரும் பலி வேட்டை : டெல்லி காவல்துறைக்கு கண்டனம்

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்கக் குஜராத் உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு, இந்தச் சம்பவத்தைப் போலி என்கவுண்டர் எனக் கண்டறிந்த நிலையில் மத்திய புலனாய்வு துறை வழக்கு பதிந்து விசாரணையில் ஈடுபட்டது என தி இந்து செய்தி தெரிவிக்கிறது.

எனக்கு உரிய பாதுகாப்பளிக்க வேண்டும் – பாஜக அமைச்சரால் பாதிக்கப்பட்ட பெண் காணொளி வெளியீடு

இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு குஜராத் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், முறையான காவலில் இருந்த போதே இஷ்ரத் ஜஹான் உட்பட நால்வரும் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறியுள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் 20 அன்று மத்திய புலனாய்வு துறையின் சிறப்பு நீதிமன்றம், காவல்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க குஜராத் மாநில அரசிடம் அனுமதி கேட்டிருந்தது, மாநில அரசு அனுமதி மறுத்ததை அடுத்து மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டக்கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் – குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் விடுதலை

அரசு அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில அரசின் அனுமதி பெற வேண்டும். ஆனால் குஜராத் மாநில அரசு காவல்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி தராததை அடுத்து இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்