Aran Sei

இதுதான் குஜராத் மாடலா? – அரசுப் பள்ளிகளின் புகைப்படங்களை பதிவிட்டு டெல்லி துணை முதலமைச்சர் விமர்சனம்

குஜராத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மிக மோசமாக இருப்பதாகவும் சில பள்ளிகளில் சிலந்திவலை கட்டியுள்ளதாவும் டெல்லி மாநில துணை முதலமைச்சரும் ஆம் ஆத்மியின் தலைவருமான மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இதுதான் பாஜகவின் 27 ஆண்டுகால ஆட்சி என்று விமர்சித்துள்ளார்.

இந்த ஆண்டு டிசம்பரில் குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வர இருப்பதால் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் குஜராத்துக்கு மனிஷ் சிசோடியா சென்றுள்ளார். மேலும் அங்கிருக்கும் அரசு பள்ளிகளைப் பார்வையிட்டுள்ளார்.

இந்து ராஷ்ட்ரா – இந்துஃபோபியா; ஒன்றிய அரசின் இரட்டை சவாரிக்கான காரணம் என்ன? – மு.அப்துல்லா

குஜராத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிட உள்ளது.  குஜராத் கல்விதுறை அமைச்சர் ஜிது வகானியின் சொந்த மாவட்டமான பாவ்நகரில் உள்ள பள்ளிக்குச் சென்று மனிஷ் சிசோடியா பார்வையிட்டுள்ளார்.  அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து, இதுதான் பாஜகவின் 27 ஆண்டு கால ஆட்சி. இது குஜராத் கல்வித்துறை அமைச்சர் இருக்கும் பகுதியில் உள்ள பள்ளிகள். இன்றுதான் 27 வருடம் கழித்து வெளியுலகிற்கு தெரிகிறது.

இன்னொரு ட்விட்டில் சில புகைப்படங்களை பகிர்ந்து, “இந்தப் படங்கள் பாஜக ஆட்சியில் இருக்கும் பள்ளிகளின் கதைகளை உங்களுக்கு சொல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில், பள்ளிக் கல்வி குறித்த விவாதத்தில் குஜராத் கல்வி அமைச்சர் வகானிக்கு சவால் விடுத்த சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்ற பிறகு டெல்லியில் உள்ள அரசு அரசுப் பள்ளிகளை ஆம் ஆத்மி அரசு மேம்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை குற்றவாளியாக்கும் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – மக்களவையில் மஹுவா மொய்த்ரா ஆவேசம்

இது குறித்துப் பேசியுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால், “பாஜகவில் உள்ளவர்களும் குஜராத்தில் சிதைந்து வரும் கல்வி முறை குறித்து கேள்விகளை எழுப்புகின்றனர். குஜராத்தில் நல்ல கல்விக்காக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். 27 ஆண்டுகளில் பாஜகவால் நல்ல கல்வியை வழங்க முடியவில்லை. டெல்லியில் வழங்கியதைப் போல ஆம் ஆத்மி அரசு குஜராத் மக்களுக்கு நல்ல கல்வியை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Source: Hindustan times

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு துணிச்சல் மிக்க தமிழன்..

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் அணி மாநிலத் தலைவர் சங்கத்தமிழன்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்