Aran Sei

பிரிட்டிஷ் ஆட்சிகால தேசத் துரோக சட்டம் இன்றும் அவசியமா? – ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட தேசத்துரோக வழக்கு இன்றும் அவசியமா? என பதிலளிக்குமாறு ஒன்றிய அரசு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேசத் துரோக வழக்குப் பிரிவு அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து முன்னாள் இராணுவ அதிகாரி தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் நீதிபதிகள் எஸ். போபண்ணா, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு இவ்வாறு கூறியுள்ளது.

”இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு தேவையற்ற தடைகளை இந்தச் சட்டம் விதிக்கிறது” என அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல அமைப்புகள் இந்த சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

”நீங்கள் வரலாற்றை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124ஏ கீழ் தண்டனைப் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கும். காரணம் இந்தச் சட்டம் இந்த அமைப்புகளால் தவறாக பயன்படுத்தப்படுகிறது” என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலிடம் தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.

பெருமையோடு திரியும் ஜாமியா துப்பாக்கிச் சூடு நடத்தியவன் – கவலையற்று இருக்கும் காவல்துறை

இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது குறித்து கவலை தெரிவித்த நீதிபதி ரமணா, “தேசத் துரோகத்தைப் பயன்படுத்துவது என்பது ஒரு மரத்துண்டை வெட்ட தச்சருக்கு ஒரு ரம்பத்தை கொடுப்பதற்கு சமம். அதை வைத்து முழு வனத்தையும் வெட்டிவிட முடியும்” என குறிப்பிட்டார்.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 ஏ பிரிவு உச்சநீதிமன்றத்தால் நீக்கப்பட்ட பிறகு தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

”எதிர் தரப்பினரின் கருத்தை ஏற்க முடியாத பட்சத்தில் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இது தனிநபர்கள் மற்றும் கட்சிகளின் செயல்பாட்டிற்கு கடும் அச்சுறுத்தலாக உள்ளது. இதைக் கண்டு மக்கள் அஞ்சுகிறார்கள்” என நீதிபதி ரமணா கூறினார்.

‘அசாம் கால்நடை பாதுகாப்பு மசோதா வகுப்புவாத சம்பவங்களைத் தூண்டும்’ – காங்கிரஸ் குற்றச்சாட்டு

சட்டத்தை மறுபரிசீலனை செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதா என்பதை அறிய விரும்புவதாக தெரிவித்துள்ள நீதிபதிகள், “சட்டப்புத்தகத்தில் இருந்து பல பழைய சட்டங்கள் நீக்கப்பட்டிருக்கிறன்றன. தேசத் துரோகச் சட்டத்தை அவர்கள் பார்க்கவில்லையா” என கேள்வி எழுப்பினர்.

தேசத் துரோக சட்டம் தவறாக பயன்படுத்துவதை தடுக்க சில வழிகாட்டுதல்கள் வகுக்கப்படலாம்” என வேணுகோபால் கூறியுள்ளார்.

Source : The Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்