Aran Sei

உதய்பூர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பா? – பாஜக தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல்

ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்காரர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புகுறித்து பாஜக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.

கொலை சம்பவத்தின் மூலம் கலவரத்தை தூண்ட சதி செய்யப்பட்டதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உதய்பூரில் கன்ஹையா லால் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிக்கு பாஜக உறுப்பினர் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியதுள்ளது. இதற்குப் பதிலளித்த பாஜக, குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளது.

உதய்பூர் கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பாஜகவோடு தொடர்பு – காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்நிலையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பாகேல், “உதய்பூரில் நடந்த காட்டுமிராண்டித்தனமான கொலை சம்பவத்தை எந்த நாகரிக சமூகமும் ஏற்றுக்கொள்ளாது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

”ஆனால் இந்த சம்பவத்தில் மற்றொரு கோணம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுடனான அதன் தொடர்புகுறித்து பாஜக சொல்ல வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் கட்சிக்கு தொடர்புகள் இருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதை பாஜக தெளிவுபடுத்த வேண்டும். வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டுவதற்கான சதியா இது? இந்த சம்பவத்தின் சதிகாரர்கள் யார்? என்பது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

உதய்பூர் படுகொலை: குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பாஜகவின் சிறுபான்மை பிரிவில் பல ஆண்டுகளாக சேர முயன்றுள்ளனர் – இந்திய டுடே ஆய்வில் தகவல்

உதய்பூர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரியாஸ் அத்காரி பாஜகவின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர் என்று இந்தியா டூடே செய்தி வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, பாஜக தலைவர்களுடன் ரியாஸ் அத்காரி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வழக்கு தற்போது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Source: The New Indian Express

Udaipur Kanhaiya lal சம்பவம் பாஜகவின் INSIDE JOB | Piyush Manush Interview | BJP GulabChand Kattaria

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்