Aran Sei

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகிறதா? – தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி தொடங்கும் என ஒன்றிய உள்துறை இணையமைச்சர் தகவல்

க்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய பணிகளைச் சீராக மேற்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக” மார்ச் 22 அன்று மக்களவையில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

குடி உரிமை திருத்தச் சட்ட (CAA) அமலாக்கத்தை மீண்டும் தீவிரமாக்குகிறது மோடி அரசு – அ.மார்க்ஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒவ்வொரு இந்தியரும், அவர்களுக்குத் தெரிந்த அல்லது நம்புவதை சட்டப்படி பதிலளிக்க வேண்டும் என்று நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்

“மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணிகளை சீராக நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாநில அரசுகளின் ஆதரவுடன் எடுக்கப்படுகின்றன” என்று ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

சிஏஏ எதிர்ப்பு போராளி அனிஷ் கான் மர்ம மரணம் – சிறப்பு விசாரணை குழுவை அமைத்த மேற்கு வங்க அரசு

2020 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30, வரை இந்தியா முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை தயாரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா நோய்த்தொற்றால் அந்த திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்