மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் மார்ச் 1-ஆம் தேதியன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கலாசார நிகழ்ச்சிகளை நடத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. சிவராத்திரியை கொண்டாடுவது தமிழக அரசின் கடமை கிடையாது என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்து சமய திருக்கோயிலின் நிருவாகத்தை முறையாகப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் 1925-ஆம் ஆண்டிற்கு முன்னரே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 1925-ஆம்ஆண்டில் `இந்து சமய அறநிலைய வாரியம்` ஏற்படுத்தப்பட்டது. இந்து திருக்கயில்கள், அறநிறுவனங்கள் மற்றும் திருமடங்கள் வாரியத்தால் கண்காணிக்கப்பட்டு வந்தது. 1951ல் இந்து சமய அறநிலைய வாரியம் கலைக்கப்பட்டு அரசுத் துறையாக செயல்பட வழிவகை செய்யப்பட்டது. 1959- ஆம் ஆண்டிலிருந்து அமலில் இருந்த இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் நடைமுறைபடுத்துவதில் சில இன்னல்கள் ஏற்பட்டது. இவற்றினை சரி செய்யவும் பல்வேறு திருத்தங்களை ஒருங்கிணைக்கவும் 1959-ஆம் ஆண்டில் இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் 22/1959 இயற்றப்பட்டது. 01.01.1960 முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் அமைச்சராக சேகர் பாபு உள்ளார்.
இம்முறை, மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் மார்ச் 1-ஆம் தேதியன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கலாசார நிகழ்ச்சிகளை நடத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப.வீரபாண்டியன், “சிவராத்திரி கொண்டாடுவது அவரவர் உரிமை. எனினும் அதனை நடத்துவது அரசின் கடமையன்று. அதேபோல், மயிலாப்பூர் ஆன்மீக நகரம் என்றால், எது பகுத்தறிவு நகரம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிகழ்வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.