Aran Sei

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயருகிறதா? – தமிழ்நாடு மின் பொறியாளர்கள் சங்கத் தலைவர் காந்தி சொல்வது என்ன?

2022 மார்ச் மாதம் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் வெளியிட்ட பட்ஜெட்டில் மின்சார துறைக்கு 19,297 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மின்வாரிய இழப்பு 13,108 கோடி மற்றும் மின்சார மானியம் – 9378 கோடி ஆகியவற்றைச் சேர்த்தால் 22,487 கோடி ரூபாய் வருகிறது. ஆகவே அதிகப்படியாக 3,180 கோடியை அரசு ஈடுகட்ட மின்சார கட்டணத்தைத் தமிழ்நாடு அரசு உயர்த்த வாய்ப்புள்ளது” என்று தமிழ்நாடு மின் பொறியாளர்கள் சங்கத் தலைவர் காந்தி தெரிவித்துள்ளார்.

அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது தமிழ்நாடு மட்டும்தானா? – பாஜக ஆளும் மாநிலமும் வாங்கியது நிரூபணம்

2021 ஆகஸ்ட் 9 ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு கடந்த நிதியாண்டின் முடிவில் 1,34,119.94 கோடி ரூபாய் கடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசின் கடன் நீங்கலாக மொத்தக் கடன் 1,24,974.49 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளை அறிக்கையின்படி 2021 ஆம் ஆண்டில் ஒரு யூனிட் மின்சாரத்தை வழங்க டான்ஜெட்கோவிற்கு ரூ. 9.06 செலவாகும் நிலையில் சராசரியாக ஒரு யூனிட்டிற்கு 6.7 ரூபாய் மட்டுமே வசூலிக்க முடிகிறது. இதனால், ஒரு யூனிட் மின்சாரத்தின் விற்பனையில் 2.36 ரூபாய் இழப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சந்திக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20-க்கு கொள்முதல் செய்வதால் மின்வாரியம் நலிவடைந்து விடும்’ – ராமதாஸ் எச்சரிக்கை

இதே மாதிரி 2019 இல் ஒரு யூனிட் மின்சாரத்தின் விற்பனையில் 2.25 ரூபாய் இழப்பும், 2020 இல் 2.14 ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது என்று இந்த வெள்ளை அறிக்கையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் ஒவ்வொரு ஆண்டும் தனது வரவு செலவு கணக்குகளைப் புள்ளிவிவர அறிக்கையாக வெளியிடுவார்கள். அதில் உள்ள புள்ளி விவரங்களுக்கும் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது எனத் தமிழ்நாடு மின் பொறியாளர்கள் சங்கத் தலைவர் காந்தி தெரிவித்துள்ளார்.

பற்றாக்குறையை போக்க 10 விழுக்காடு வரை நிலக்கரி இறக்குமதி – மின் உற்பத்தியாளர்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி

அதாவது, 2021 ஆம் ஆண்டு ஒரு யூனிட் மின்சாரத்தின் விற்பனையில் 2.36 ரூபாய் இழப்பு என்று வெள்ளை அறிக்கை கூறுகிறது. ஆனால், தமிழ்நாடு மின்சார வாரிய புள்ளிவிவர அறிக்கையில் 1.42 ரூபாய் தான் இழப்பு என்று கூறுகிறது. அதே மாதிரி வெள்ளை அறிக்கையில் 2020 ஆம் ஆண்டு 2.14 ரூபாய் இழப்பானது புள்ளிவிவர அறிக்கையில் 1.26 ரூபாயாக உள்ளது. 2019 ஆண்டு 2.25 ரூபாய் இழப்பானது புள்ளிவிவர அறிக்கையில் 1.33 ரூபாயாக உள்ளது என்று காந்தி கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிய அரசு தர நிர்ணயம் செய்கிறது. அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியத்தை ICRA என்ற நிறுவனம் தர நிர்ணயம் செய்துள்ளது. அந்நிறுவனத்தின் அறிக்கையில் 2019-20 ஆம் ஆண்டில் மின் வாரியத்திற்கு 1 யூனிட் மின்சார விற்பனையில் 0.74 ரூபாய் தான் இழப்பு என்று கூறுகிறது.

மின்சார செலவை அரசு குறைக்க முடியும் – ஆய்வு

அதாவது 2020 நிதியாண்டில் வெள்ளை அறிக்கையில் 2.14 ரூபாய் இழப்பு, புள்ளி விவர அறிக்கையில் 1.26 ரூபாய் இழப்பு, ICRA நிறுவனத்தின் அறிக்கையில் 0.74 ரூபாயும் இழப்பு என்று 3 வெவ்வேறு தகவல்கள் நமக்குக் கிடைக்கிறது. இந்த தகவல்களைத் தமிழ்நாடு மின்சார வாரியம் கொடுத்த பொழுதிலும் இந்த வேறுபாடு எதனால் ஏற்பட்டது? என்று காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதால்தான் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குக் கடன் அதிகமாக இருக்கிறது என்று ஒன்றிய அரசு திரும்பத் திரும்ப கூறி வருகிறது என்று காந்தி தெரிவித்துள்ளார்.

மாதாந்திர மின்‌ கணக்கீடு என்ற வாக்குறுதியையாவது திமுக அரசு செயல்படுத்துமா? – ஒ.பன்னீர்செல்வம் கேள்வி

தமிழ்நாடு மின்சார வாரியம் தனக்குத் தேவையான பெருமளவிலான கடன்களை ஒன்றிய அரசின் நிதி நிறுவனங்களிடம் இருந்து தான் பெறுகிறது. ஆக இந்த நிதி நிறுவனங்களின் தயவு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குத் தேவைப்படுகிறது. ஆகவே ஒன்றிய அரசு வலியுறுத்திய வகையில் மின்சார கட்டணத்தைத் தமிழ்நாடு அரசு உயர்த்தியாக வேண்டிய கட்டாயம் உள்ளது என்று பரவலாகச் சொல்லப்படுகிறது என்கிறார் காந்தி.

மறுபுறம் 2017 ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயரவில்லை என்ற காரணத்தை மின்சார உயர்விற்குக் காரணமாகச் சிலர் சொல்லுகிறார்கள்.

‘உடன்குடியில் புதிய அனல் மின் நிலையங்களை அமைத்தால் மின் கட்டணம் உயரும்’ – க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் அறிக்கை

1,34,119.94 கோடி ரூபாய்க் கடன் இருப்பதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் மாநில அரசு பொறுப்பெடுத்துக் கொண்ட கடன்களையும் கணக்கிட்டால் மொத்தமாக 1,80,000 கோடி வரும் என்று காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மின்சார வாரியத்திற்கு நட்டம் என்று எதுவுமே இல்லை. மின்சார சட்டம் திருத்தப்பட்ட இந்த 19 ஆண்டுகளில் தான் 1,80,000 கொடி நட்டம் வந்து சேர்ந்திருக்கிறது.

டெஸ்லா எனும் மாமனிதனும், எடிசன் என்ற சூழ்ச்சிக்காரனும் – கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

இந்த 20 ஆண்டுகளில் 2.20 ரூபாய் இருந்த மின்சார கட்டணம் 3 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது மக்கள் அதிகளவிலான மின் கட்டணங்களைச் செலுத்தியும் கூட கடன் அதிகமாயிருக்கிறது என்று காந்தி தெரிவித்துள்ளார்.

ஆகவே ஒன்றிய அரசு கூறுவது போல மின்சார கட்டணத்தை உயர்த்தாததால் தான் மின்சார துறையின் கடன் அதிகமாகிறது என்ற ஒன்றிய அரசின் வாதம் இங்கு அடிபட்டுப் போகிறது என்று காந்தி விளக்கம் கொடுக்கிறார்.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்: கிடைக்குமா நிதி உதவி?

மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதிலும், மின்சாரத்தைத் தனியார்கள் பயன்படுத்துவதிலும் பெரிய கொள்ளை, ஊழல் நடந்துள்ளது அதன் விளைவாகவே மின்சார துறையின் கடன் அதிகளவில் உயர்ந்துள்ளது. ஆகவே இதன் சுமைகளை மின்கட்டண உயர்வின் மூலம் சாமானிய மக்களின் தலையில் கட்ட தமிழ்நாடு அரசு முயற்சித்து வருகிறது என்று தமிழ்நாடு மின் பொறியாளர்கள் சங்கத் தலைவர் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

*******************                      ************************                        *******************************

தமிழன்னையை கறுப்பாக வரைந்ததற்கு வலதுசாரிகள் எதிர்ப்பு. தமிழன்னை கறுப்பாக இருக்கலாமா? மக்கள் கருத்து என்ன? 

தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்