Aran Sei

பிளாஸ்மா சிகிச்சை அறிவியல் பூர்வமற்ற முறையென ஆய்வாளர்கள் கடிதம் – கொரோனா நெறிமுறையிலிருந்து நீக்கம் செய்ய முடிவு

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் பிளாஸ்மா சிகிச்சை முறை, தேசிய கொரோனா சிகிச்சை நெறிமுறைகளிலிருந்து நீக்கப்பட முடிவு செய்துள்ளதாக முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பஞ்சாயத்து தேர்தலில் பணியாற்றிய 1600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனாவால் உயிரிழப்பு – உத்திரபிரதேச ஆசிரியர் சங்கம் தகவல்

மேலும், அமெரிக்க அரசு ஆய்வு முடிவுகளோடு பிளாஸ்மா சிகிச்சை முறை, கொரோனா நோயாளிகளுக்குப் பலனளிப்பதில்லை என்று கூறிய பிறகு இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

அதுமட்டுமல்லாது, முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவனுக்கு எண்ணற்ற மருத்துவர்களும், அறிவியலாளர்களும் எழுதிய கடிதத்தில், ’பகுத்தறிவற்ற மற்றும் அறிவியல் பூர்வமற்ற’ முறையில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டிருந்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மாட்டு மூத்திரத்தை தினமும் குடிப்பதால் தான் கொரோனாவால் பாதிப்படையவில்லை: பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் பெருமிதம்

இந்தக் கடிதம்குறித்து தெரிவித்துள்ள தொற்றுக்கிருமி ஆய்வாளர் ககன்தீப் காங், “பகுத்தறிவற்ற முறையில் பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்வது என்பது திறன்வாய்ந்த மாறுபாடடைந்த வைரஸை உருவாக்கவே வழிவகுக்கும், இது மேலும் தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்தும்” என்று கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, கடந்த செப்டம்பர் மாதம் ஐ.சி.எம்.ஆர் நடத்திய ஆய்விலும் பிளாஸ்மா சிகிச்சை இறப்பு எண்ணிக்கையைக் குறைப்பதாகவோ, தொற்றைக் கட்டுப்படுத்துவதாகவோ கண்டறியப்படவில்லை என்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடர்: வைரசின் இரக்கமின்மைக்கும்,  மோடி அரசின் இரக்கமின்மைக்கும் சம பங்கு உண்டு – மருதையன்

மேலும், கடந்த டிசம்பர் மாதம், ஐ.சி.எம்.ஆர் நிறுவனத்தின் இயக்குனர், முறையற்ற சிகிச்சைகளினால் நோய் எதிர்ப்புத் திறன் பாதிப்படையும், வைரஸ் அதிகளவில் மாறுபாடடையவும் வாய்ப்புள்ளது என்று கூறியிருந்ததாக அந்த செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்