Aran Sei

தீவிரவாதி என்று கைது செய்யப்பட்டவர் மர்ம மரணம் – உடற்கூராய்வு அறிக்கையைத் தர காவல்துறை மறுப்பு

தீவிரவாதி எனக்கூறி காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு மர்மமாக மரணமடைந்தவரின் குடும்பம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட அவரின் உடற்கூறாய்வு அறிக்கையை அம்மாநில காவல்துறை தர மறுத்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 15 2020 அன்று இர்பான் அஹமத் தார் என்பவரை தீவிரவாத அமைப்பின் அடிமட்ட உறுப்பினர் என்று சொல்லி ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு காவல்படையால் கைது செய்யப்பட்டார் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிஏஏ வுக்கு எதிராக போராடியவர் மரணம்: சிசிடிவி வேலை செய்யவில்லை என காவல்துறை நீதிமன்றத்தில் அறிக்கை

இந்நிலையில், அடுத்த நாள் காலை கற்குவாரி பக்கத்தில் சடலமாக அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் தி வயர் செய்தி கூறுகிறது.

இதுகுறித்து தெரிவித்த காவல்துறை, ” இர்பான் சிறப்பு காவல் படை தடுப்பு முகாமில் இருந்து தப்பித்து சென்றார். முகாம் பகுதியில் இருந்த அதிகப்படியான இருளும்,இந்தப்பகுதியின் பாறைகளின் தன்மையும் தான் அவர் தப்பித்து செல்ல வசதியாக இருந்திருக்கிறது” என்றும் கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இர்பானை தேடும் பணியில் ஈடுபட்டபோது அவரது உடல் குவாரிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை கூறியதாக தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துணை காவல் ஆய்வாளர் மகன் மீது புகாரளித்தவர் மர்ம மரணம் – விசாரணைக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை

இந்நிலையில், இர்பானின் உடல்கூறு ஆய்வு அறிக்கையைக் கேட்டு இறந்த இர்பானின் குடும்பம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மனுவைக் காவல்துறை வழக்குக்கு இடையூறு ஏற்படும் என்று தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவு 8 ஐ மேற்கோள்கட்டி நிராகரித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இறந்தவரின் குடும்பம் நீதிபதி தலைமையிலான குழு இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென ஜம்மு காஷ்மீர் உயர்நீதி மன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் தி வயர் செய்தி செய்தி கூறுகிறது.

காவல்நிலையத்தில் புகாரளித்தவரின் மர்ம மரணம்: இடைநீக்கம் செய்யப்பட்ட மூன்று காவலர்கள்

கடந்த 2011 ஆம் ஆண்டு தேசிய தகவல் ஆணையம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உடல்கூறாய்வு அறிக்கையை வெளியிடத் தடை இல்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்