Aran Sei

இந்தியாவின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய தயார் -ஈரான் தூதர் அலி செகெனி

ந்தியாவின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய ஈரான் தயாராக உள்ளது என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகெனி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு இரண்டாவது பெரிய எண்ணெய் வழங்கும் நாடாக ஈரான் இருந்துள்ளது. ஆனால் ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால் இந்தியா ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி கொண்டது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி – ஆயிரக்கணக்கான லிட்டர் டீசலை இருப்பு வைக்கும் பஞ்சாப் மக்கள்

“இந்தியாவின் ரூபாய்-ஈரானின் ரியால் வழியாக 2 நாடுகளின் நிறுவனங்களும் நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபட்டால், மூன்றாம் தரப்பிலிருந்து வரும் செலவுகளையும் தவிர்க்கலாம்” என்று அனைத்திந்திய தொழில் சங்கம் மற்றும் எம்.வி.ஐ .ஆர்.டி.சி உலக வர்த்தக மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகெனி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவிற்கு இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்வதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா குழாய்த்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் இதற்கான மாற்று வழிகளைத் தேடவும், இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்றவும் ஈரான் தயாராக உள்ளது என்று அதன் தூதர் அலி செகெனி தெரிவித்துள்ளார்.

உலகளவில் எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. அதன் கச்சா எண்ணெய் தேவையில் 80 விழுக்காட்டை இறக்குமதி வழியாகவே இந்தியா ஈடுகட்டுகிறது.

ரஷ்யா – உக்ரைன் போர் சூழல் – $100 மேல் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக, மார்ச் 2019 வரையிலான நிதியாண்டில் 17 பில்லியன் டாலராக இருந்த இந்தியா-ஈரான் வர்த்தகம், 2021 ஏப்ரல்- 2022 ஜனவரி வரையிலான 10 மாதங்களில் 2 பில்லியன் டாலருக்கும் கீழ் குறைந்தது.

“இரு நாடுகளும் ரூபாய்-ரியால் வழியாக வர்த்தகத்தை மேற்கொண்டால், இருதரப்பு வர்த்தகமும் 30 பில்லியன் டாலர்களாக உயரும்” என்று ஈரான் தூதர் அலி செகெனி தெரிவித்துள்ளார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்