Aran Sei

கொரோனா பரவலின் எதிரொலி – ஐ.பி.எல் போட்டியிலிருந்து விலகிய நடுவர்கள்

ந்தியாவின் முக்கிய கிரிக்கெட் நடுவரான நிதின் மேனன் மற்றும் ஆஸ்திரேலியாவை சார்ந்த பால் ரெய்ப்பெல் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக ஐ.பி.எல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

ஐ.சி.சி யின் எலைட் நடுவர் குழுவில் உள்ள ஒரே இந்தியர் நிதின் மேனன் ஆவர், இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக அவர் அவ்வாறு சிறப்பிக்கப்பட்டிருந்தார்.

’ ஹலோ துபாயா? ஸ்கோர் என்ன சார்? ’ – ஐ.பி.எல் ரசிகர்கள் ரெடி

இந்நிலையில், நிதினின் மனைவி மற்றும் தாய் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல் போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இதே போன்று ஆஸ்திரேலியாவை சார்ந்த பால் ரெய்ப்பெலும், ஆஸ்திரேலியா அரசு இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளத் தடை விதிக்கவுள்ளதால் உடனடியாக ஐ.பி.எல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகள் தொடக்கம் ; என்ன எதிர்பார்க்கலாம்?

நிதின் தற்போது நடைபெறும் ஐ.பி.எல் போட்டியிலிருந்து விலகும் இரண்டாவது இந்தியன் ஆவர். இதற்கு முன் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விலகியிருந்தது கவனிக்கத்தக்கது.

இதே போன்று, இந்தியாவில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக ஆண்ட்ரூ டை, கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா ஆகிய மூன்று ஆஸ்திரேலியா வீரர்கள் போட்டியிலிருந்து விலகிஇருயிருப்பது குறிப்பிடத்தக்கது.

source; the hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்