Aran Sei

கடந்த மூன்று ஆண்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை – பீகார் முதலிடம்

டந்த 2௦17 ஆம் ஆண்டிலிருந்து 2௦2௦ வரை நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை  31லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாகத் தேசிய குற்றஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் வழியாக தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த 2௦17 ஆம் ஆண்டு 99.7 லட்சம்  வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில்,  2௦2௦ஆம் ஆண்டு 1.31 கோடி  வழக்குகள் நிலுவையில் உள்ளன.

’நாங்கள் காந்தியையே விட்டுவைக்கவில்லை’ – கர்நாடக முதலமைச்சரை மிரட்டிய இந்து மகாசபை தலைவர் கைது

இந்தியாவிலேயே அதிகபட்சமாகப் பீகாரில் 99.6 விழுக்காடு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேவேளையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா பிரதேசம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் குறைவான நிலுவையுள்ள வழக்கு விகிதமே கொண்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும்  கேரளா ஆகிய மாநிலங்களில்  முறையே 88.1 %, 89.8 %, 83.7 % மற்றும் 87.5 % வழக்குகள் நிலுவையிலுள்ளன.

அதிருப்தியில் மேற்குவங்க பாஜகவினர் – கட்சித் தாவுகிறாரா பாஜக எம்.எல்.ஏ?

இத்தோடு, இந்திய தண்டனைச் சட்ட  வழக்கில் விசாரணை முடிவடைந்து தண்டனை பெற்றவர்களின்  விகிதம் கடந்த 2௦2௦ ஆம் ஆண்டு 59.2% ஆக உள்ளதாகவும் தேசிய குற்றஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் வழியாக தெரியவந்துள்ளது.

எனினும், தண்டனை பெற்றவர்களின்  விகிதமானது நாட்டின் சராசரியை விட  குறைவாக  பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் முறையே 30.5 % மற்றும் 13.4 % ஆகப் பதிவாகியுள்ளது.

‘ஜனநாயகத்தின் அனைத்து தூண்களையும் பலவீனப்படுத்துவதுதான் பாஜகவின் சித்தாந்தம்’ – காங்கிரஸ் விமர்சனம்

இதே போன்று, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் முறையே 74.8 %, 69.7 %மற்றும் 66 % ஆகப் பதிவாகியுள்ளதாகவும் தேசிய குற்றஆவணக் காப்பகத்தின் அறிக்கை வழியாக தெரியவந்துள்ளது.

Source: The new Indian express 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்