சந்தை மதிப்பில் 50 ஆயிரம் கோடி ரூபாயை கடந்தததன் மூலம், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கி என்ற இடத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி)அடைந்துள்ளது.
வங்கியைத் தனியார்மயமாக்குதல், கடன் தள்ளுபடி போன்ற நடவடிக்கைகளால் கடந்த ஒரு மாதத்தில் மும்பை பங்கு சந்தையில், வங்கியின் பங்குகள் 50 விழுக்காடு வரை உயர்ந்துள்ளன.
இதன் மூலம் வங்கியின் சந்தை மதிப்பு ஐம்பதாயிரம் கோடியைத் தாண்டி அதன் போடிட்யாளர்களான பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடாவை தாண்டி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
வெள்ளிக்கிழமை மதியம் 3.04 மணிக்கு ரூ. 51,887 கோடி சந்தை மதிப்பை எட்டியை ஐஓபி, பஞ்சாப் நேஷனல் வங்கி (ரூ. 46,411 கோடி) மற்றும் பாங்க் ஆஃப் பரோடா (ரூ. 44,112 கோடி) வங்கியை முறையே மூன்று மற்றும் நான்காவது இடத்திற்கு தள்ளியுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் ஐஓபியின் பங்கு 57 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது, இதனுடன் ஒப்பிடுகையில் பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகளின் விலை 4 விழுக்காடு சரிந்தும், பாங்க் ஆப் பரோடாவின் பங்குகள் விலை 5 விழுக்காடு ஆதாயமடைந்தும் காணப்படுகின்றன.
2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிதி திரட்டல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஐஓபி தனியார்மயமாக்குவதற்கு வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியானதில் இருந்து அதன் பங்குகளின் மதிப்பு உயர தொடங்கியுள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவாக ஜூன் 30, 2021 ஆம் தேதி, ஐஓபி வங்கி பங்கின் மதிப்பு ரூ. 29ஐ எட்டியுள்ளது. இதற்கு முன்னர் இந்த தொகையை 2017 ஆம் ஆண்டு மே மாதம் எட்டியது குறிப்பிடத்தக்கது.
நிதி ரீதியாக, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ஐஓபி வங்கியின் வட்டியில்லாத வருமானத்தின் நிகர லாபம் இரண்டு மடங்காக உயர்ந்து ரூ. 350 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் கடந்த ஆண்டின் லாபம் ரூ. 144 கோடியாக இருந்துள்ளது.
Source : Business Standard
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.