Aran Sei

‘பெண் ஆய்வாளர்களின் பங்களிப்புகளால் அதிகரிக்கும் அறிவியல் ஆய்வுகளின் எண்ணிக்கை’ – ஒன்றிய அறிவியல்துறை அறிக்கை

பெண்கள் அறிவியல் ஆய்வாளர்களாக பங்களிப்பதனால், அறிவியல் ஆய்வுகளின் விகிதம் உயர்ந்திருப்பது அறிவியல் மற்றும் மற்றும் தொழிற்நுட்பத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆய்விற்கான கூடுதல் நிதி உதவியானது கடந்த 2017-18 ஆண்டு காலத்தில் 24% ஆக இருந்ததாகவும், அது 2018-2019 ஆண்டுகாலத்தில் 28% ஆக இருந்ததாகவும் கூடுதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டம் 2018-19 அறிக்கையின் வழியாக தெரியவந்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

கூகுள் நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விலகும் கறுப்பின பெண்கள் – வருடாந்திர பன்முகத்தன்மை ஆய்வறிக்கை தகவல்

இதேபோன்று, ஒன்றிய அரசு நிதிஉதவி வழங்கும் கூடுதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்கான ஒதுக்கீடு , 2017-18 ஆண்டு காலத்தில் 2036.32 கோடி ரூபாயாகவும், 2018-2019 ஆண்டுகாலத்தில் 2091.04 கோடி ரூபாயாக இருந்ததாகவும் அறிவியல் மற்றும் மற்றும் தொழிற்நுட்பத்துறை  அறிக்கை கூறுவதாகவும்  அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இவ்விரு முடிவுகளின் வழியாக ஆய்வுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் சிறையில் இருக்கும் கேரளப் பெண்கள் – நாடு திரும்ப அனுமதிக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவிப்பு

மேலும், 64% அறிவியல் ஆய்வுகள் தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், மற்றும் மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களில் இருந்து பெறப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் தொழிற்நுட்பத்துறை நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-18 ஆம் ஆண்டில் 3491 முதன்மை ஆய்வாளர்கள் 4,137 ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் , தற்போது 3,839 முதன்மை ஆய்வாளர்கள் 4,616 ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்