Aran Sei

செய்திநிறுவன அலுவலகங்களில் ஆய்வு நடத்திய வருமான வரித்துறை – எடிட்டர்ஸ் கில்ட் கண்டனம்

நியூஸ் லாண்டரி மற்றும் நியூஸ் கிளிக் இணைய செய்திநிறுவனங்களின் அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டது அரசியலமைப்பு ஜனநாயகத்தை தரம் தாழ்த்துகிறது  என்று ‘எடிட்டர்ஸ் கில்ட் ‘ அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், இது பத்திரிகை சுதந்திரம் மீதான  தெளிவான மிரட்டல் மற்றும் அப்பட்டமான தாக்குதல் என்றும்   நியூஸ் லாண்டரி செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனர் அபிநந்தன்    தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

கடந்த செப்டம்பர் அன்று நியூஸ் லாண்டரி மற்றும் நியூஸ் கிளிக் ஆகிய செய்தி நிறுவனங்களின் அலுவலகங்களில் வருமான வரித்துறை  ஆய்வு மேற்கொண்டிருந்தது. மேலும், இது சோதனை இல்லை என்று வருமான வரித்துறை  அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து   ‘எடிட்டர்ஸ் கில்ட் ‘ வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுதந்திரமான ஊடகங்களை மிரட்டும் மற்றும் துன்புறுத்தும் வகையில் ஒன்றிய அரசு நிறுவனங்கள் பயன்படுத்தப்படுவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும். இது அரசியலமைப்பு ஜனநாயகத்தை தரம் தாழ்த்துகிறது”. என்று கூறியுள்ளது.

செப்-11 இரட்டைக் கோபுர தாக்குதல் – பின்னணியும் வரலாறும்

மேலும், இது நியூஸ் லாண்டரி பத்திரிக்கை அலுவலகத்தில் நடைபெற்ற  வருமான வரித்துறையினர் நடத்திய  இரண்டாவது  ஆய்வு என்றும், இதே போன்று, கடந்த பிப்ரவரி மாதம் நியூஸ் கிளிக் பத்திரிக்கை அலுவலகம் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் வீட்டில் அமலாக்கத் துறையினர்  ஆய்வு மேற்கொண்டதாகவும் எடிட்டர்ஸ் கில்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், முறையாக வரையறுப்பட்ட விதிகளின் அடிப்படையிலேயே இது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர, சுதந்திரமான ஊடகத்தை மிரட்டும் வகையிலும்,  துன்புறுத்தும் வகையிலும் பயன்படுத்தக் கூடாது  என்று  எடிட்டர்ஸ் கில்ட்  குறிப்பிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்