Aran Sei

சட்டத்தைக் கொண்டு எளிய மனிதர்களை வதைக்கும் அரசு – செயற்பாட்டாளர் எறேன்றோ லைசோம்பம் நேர்காணல்

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள  மணிப்பூர் மாநிலத்தைச் சார்ந்த செயல்பாட்டாளர் எறேன்றோ “தி வயர்” செய்தி நிறுவனத்துக்கு நேர்காணல் அளித்துள்ளார்.

அதில் அவர் சிறைபடுத்தப்பட்ட  விதம், மணிப்பூர் காவல் துறை அவரை நடத்திய விதம் குறித்து தெரிவித்துள்ளதாக  அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மே 13  அன்று  , மாட்டுச் சாணம் கொரோனா தொற்றைக் குணப்படுத்தாது என்று பதிவிட்டதற்காக அவர் மணிப்பூர் அரசால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

கடந்த மே 13 நீங்கள் கைது செய்யப்பட்டது குறித்து கூற முடியுமா என்ற கேள்விக்கு, “அவர்களிடம் என்னை கைது செய்வதற்கான எவ்வித ஆணையும் அவர்களிடம் இல்லை. நான் கைது செய்யப்படுவதை என் தாய் தடுக்க முற்பட்டார். ‘நீங்கள் கைது கூட செய்து கொள்ளுங்கள் ஆனால் முறையான உடைஉடுத்திக் கூட்டி செல்லுங்கள்’ என்று அவர் காவல்துறையிடம் கூறினார். காவல்துறை என்னிடம் வன்முறையோடு நடந்துகொண்டது அதுவே மேலிடத்தில் இருந்து கடுமையான அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்பதை உணர்த்தியது” என்று எறேன்றோ கூறியதாகவும் தி வயர் செய்தியில் குறிபிடப்பட்டுள்ளது.

‘ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறப்பில்லையா?’ ஒன்றிய அரசு பொய் சொல்வதாக டெல்லி அரசு கண்டனம்

மேலும்,காவல்நிலையத்தில் என்ன நடந்தது என்ற கேள்விக்கு,”நான்  இரவு 9 மணிக்கு இம்பால் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டேன். எனக்குப் பின்னர் பத்திரிகையாளர் கிஷோரேச்சந்திர வாங்கேம் அங்கு அழைத்து வரப்பட்டார். காவல்துறை எங்களிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினர். நான் முன்னேபோதும் அது போன்ற வார்த்தையைக் கேட்டதில்லை. அவர்கள் எனது தொலைபேசியைக் கேட்டனர்; கொடுத்தேன். அதன் கடவுச்சொல்லையும் கேட்டனர். நான் கூற மறுத்து விட்டேன். நான் பல முக்கியமான தகவல்களைத் தொலைபேசியில் சேகரித்து வைத்திருந்தேன்.  பின்னர், நானும் பத்திரிக்கையாளர்  கிஷோரேச்சந்திர வாங்கேமும்  சிறைக்குள் அடைக்கப்பட்டோம். அங்கிருந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று என காவலர் தெரிவித்தார். அதைக் கேட்டதும் கொரோனா நடைமுறைகள் பின்பற்றவில்லை எங்களுக்கு தனிசிறை தாருங்கள் என்று நான் போராட்டத்தில் ஈடுபட்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளதாகவும்   அந்தச்  செய்தியில்  கூறப்பட்டுள்ளது.

திரைக்கலைஞர் ஆயிஷா சுல்தானா மீதான தேசத்துரோக வழக்கு – திரும்பப் பெற மறுத்த தீவு நிர்வாகம்

நீதிமன்ற வளாகத்தில் நீங்கள் நிறுத்தப்பட்டது குறித்து எங்கள் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு,”நான் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டது குறித்து நீதிபதியிடம் தெரிவித்தேன். நீதிமன்றத்தில் ஆஜராவதை காவல்துறை அதிகாரி அதை மறுத்தார்.  நீதிபதி எங்களை நான்கு நாட்கள் விசாரனைக் காவலில் அடைத்தார். அந்த நான்கு நாட்களும் தூங்குவதற்கு கூட அனுமதிக்பபடவில்லை.தொடர்ந்து எதாவது கேட்டுகொண்டே இருந்தனர். எங்கள் மீது எந்த வழக்குகளும் இல்லை. எனவே எங்கள் மீது வழக்கை ஜோடிக்க அவர்கள் முயன்று கொண்டிருந்தனர்.” என்று  எறேன்றோ கூறியதாகவும் தி வயர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெகசிஸ் தாக்குதல்  இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலின்றி நடந்தேறி இருக்க முடியாது – சிவ சேனா குற்றச்சாட்டு

இதேபோன்று, நீங்கள் உங்கள் மீதான வழக்கு திரும்பப்பெறப்பட வேண்டும் என்று மட்டும் கோராமல்,தவறாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டால் இழப்பீடு வழங்கப்படவேண்டுமென உச்சநீதிமன்றத்தில்  கோரியதன் பின்னணி என்ன? என்ற கேள்விக்கு, “அந்த முடிவின் முக்கியமானக் காரணம்   “பொறுப்புக்கூறல்” , தற்போதைய  மணிப்பூர் அரசு சில படிப்பினைகளை உணர வேண்டும்.  ஒரு நபரை அவ்வளவு எளிதாக சிறையில் அடைத்து விட முடியாது. ஏனெனில் அது அந்த நபரை விரும்பவில்லை என்ற இதுபோன்ற  அதன் அரசியலமைப்பு அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்ய முடியாது. என் வழக்கு போன்று சில வழக்குகளில் நீதித்துறை சட்டம் முன்பு நிற்க வேண்டுமென்பதை இந்த மாநில அரசு அறிய வேண்டும். ஆனாலும் அது தொடர்ந்து ஒரு நபரின் மன,உடல்நலனுக்கு அழுத்தம்  மட்டுமல்லாது. பொருளாதார அழுத்தத்தையும் கொடுத்து வருகிறது” என்று செயல்பாட்டாளர் எறேன்றோ “தி வயர்” செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில்  தெரிவித்துள்ளார். 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்