Aran Sei

”இணைய ஏகாதிபத்தியத்தை  இந்தியாவில் அனுமதிக்க முடியாது” – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

உலகளவில் குறிப்பிட்ட சில சமூக ஊடக நிறுவனங்கள் மேற்கொள்ளும் ’இணைய ஏகாதிபத்தியத்தை’ இந்தியாவில் அனுமதிக்க  முடியாது என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

அந்த இணைய நிறுவனங்கள் இந்தியாவின் கருத்துகள், கலாச்சாரம், மரபுகள்  மற்றும் உணர்வுகளை மதிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்ததாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Meity) அறிவித்த சமூக ஊடகங்களின் புதிய வழிகாட்டுதல்களின் பின்னணியில் மத்திய அமைச்சர் பிரசாத் இக்கருத்தைக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வலதுசாரி இந்து அமைப்புகளின் வன்முறைக்கு இடமில்லை – நியூசவுத் வேல்ஸ் சட்டமன்ற உறுப்பினர்

“குறிப்பிட்ட சில சமூக ஊடக நிறுவனங்கள் மேற்கொள்ளும் ’இணைய ஏகாதிபத்தியத்தை’ இந்தியாவில் ஏற்றுக்கொள்ள முடியாது. இணையம் ஒரு உலகளாவிய நிகழ்வாக இருப்பதால், அது ஏகாதிபத்தியமாக மாறிவிட்டது, ஏனெனில் அது மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. இது புறஉலகின் எல்லைகளைத் தாண்டிவிட்டது. இணைய ஜனநாயகத்தின் பரிணாமம் அசாதாரணமானதாக உள்ளது. அதை மதிக்க வேண்டிய அவசியம் உள்ளது, ”என ரவிசங்கர் பிரசாத் கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய விதிமுறைகள், இணையத்தின் பேச்சு சுதந்திரம் மற்றும் விமர்சனங்களை முடக்க பயன்படுத்தபடும் ஆயுதம் என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளித்த ரவிசங்கர், ’சமூக ஊடக நிறுவனங்கள்’ சில சொற்களை முன்கூட்டியே கண்காணிக்க தானியங்கி கருவிகளைக் கொண்டிருக்க வேண்டும்” என பல தனியுரிமை வல்லுனர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என அவர் தெரிவித்தாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய பாரம்பரியத்துக்கு மதசார்பின்மை பெரிய தீங்கு – யோகி ஆதித்யநாத்

“ஊடக வாடிக்கையாளர்களின் சுதந்திரம் குறித்து புதிய விதிகளின் அடிப்படையில், அரசு இணைய நிறுவனங்களைக்  கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக, சமூக ஊடக நிறுவனங்கள் இதைத் தானாக முன்வந்து பின்பற்ற வேண்டும். அரசாங்கத்தை விமர்சித்து, அதற்கு அறிவுரை கூற விரும்புபவர்கள் தங்கள் அடையாளங்களைச் சரிபார்க்க தைரியம் இருக்க வேண்டும், இதனால் அவர்களின் ’உண்மைத்தன்மை’ கண்டறிய முடியும்” என ரவிசங்கர் கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களை “தவறாக பயன்படுத்துதல் மற்றும் துஷ்பிரயோகம் செய்தல்” குறித்து அந்தந்த நிறுவனங்களே பொறுப்பேற்க புதிய விதிகள் தேவை என்றும், 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூக வலைதளங்கள், வலிமையான குறை தீர்க்கும் வழிமுறைகளை அமைத்து, அதற்கான நிர்வாகிகளை நியமிப்பதோடு, இந்திய சட்ட அமலாக்கத்துறையுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என அவர் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகா பாஜக அமைச்சர் பாலியல் முறைகேடு – புகாரை திரும்பப் பெறுவதாக குற்றம் சாட்டியவர் மனு

தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா இறுதி வரை நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்தப் புதிய தொழில்நுட்ப விதிகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் இறுதி  வரவு அடுத்த பதினைந்து தினங்களில் சமர்பிக்கப்படலாம் வாய்ப்பிருப்பதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்