Aran Sei

கொரோனா இரண்டாவது அலை பரவல்: மோடி தான் முக்கிய குற்றவாளி – சர்வதேச ஊடகங்கள் குற்றச்சாட்டு

credits : scroll

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையை மோடி அரசாங்கம் கையாண்ட விதத்தைச் சர்வதேச ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்தியாவில் நேற்றைய தினம், 3,19, 329 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,76, 25,749 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் 1,97,880 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 2762 பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பத்திரிகைகள் கொரோனாவின் இரண்டாவது அலையை இந்திய அரசு கையாண்ட விதத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளன.

கொரோனா தடுப்பூசிகளின் விலையைக் குறைக்க வேண்டும் – சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை

”இந்தியா தற்போது ஒரு வாழும் நரகம் ஆகிவிட்டது” என்று கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி, வெளியான தி கார்டியன் பத்திரிகை தெரிவித்தது.

வாக்கு எண்ணும் தினத்தில் வெற்றி கொண்டாட்டங்களுக்குத் தடை – கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை

”கொரோனா நோய்த்தொற்று பரவிக் கொண்டிருக்கும் போதும் தேர்தல் பிரச்சாரத்தைக் கைவிடாத அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை போல பிரதமர் நரேந்திர மோடியும் கொரோனா தொற்றின்போது பிரச்சாரத்தைக் கைவிடவில்லை” என்று தி கார்டியன் சுட்டிக்காட்டியது.

மேலும் ”பிரதமர் செய்த தவறை ஒப்புக்கொண்டு, செய்த தவறுகளுக்கெல்லாம் மக்களிடம் மன்னிப்பு கேட்டு, தவறுகளைச் சரி செய்ய வேண்டும்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டெல்லியில் கணக்கிடாமல் விடப்பட்ட 1150 கொரோனா இறப்புகள் : சுடுகாடுகளில் என்டிடிவி நடத்திய ஆய்வு

இஸ்ரேலிய நாளிதழான ஹாரெட்ஸ்,  ”கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள இந்திய அரசுக்குப் போதுமான நேரமிருந்தது, ஆனால் தற்போது இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் பார்க்கவே கடினமாக உள்ளது” என்று கூறியுள்ளது.

”கொரோனா இரண்டாவது அலைக்கான முன் தயாரிப்புகளைக் கேள்வியெழுப்பாமல், மோடியை முன் வைத்து ஊடகங்கள் அவரது புகழை பாடிக் கொண்டிருந்தன” என்றும் ஹாரெட்ஸ்  குற்றம் சாட்டியுள்ளது.

இயக்குனர் தாமிரா கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார் – போய் வாருங்கள் ஆண் தேவதையே

”ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைத் தணிக்கை செய்வதிலும், செய்திகளையும் கொரோனாவால் மரணமடைவோரின் எண்ணிக்கை மறைப்பதிலும் நடவடிக்கை எடுத்த நரேந்திர மோடி, கொரோனா இரண்டாவது அலைக்கு இந்தியாவை தயார் செய்வதில் தோல்வி அடைந்து விட்டார். இந்தியர்கள் மடிந்து கொண்டிருக்கிருப்பது போல பிரதமரின் கடினமான மனிதன் என்ற பிம்பமும் மடிந்து கொண்டிருக்கிறது” என்று ஹாரெட்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகள் நெஞ்சை உலுக்கக்கூடியதாக உள்ளது – உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வருத்தம்

ரேடியோ பிரான்ஸ் இண்டர்நேஷனலே எனும் பத்திரிகை, ”இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்து விட்டது. இதன் முக்கிய குற்றவாளி பிரதமர் நரேந்திர மோடி” எனும் தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது.

கும்பமேளா – ஹரித்துவாரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 நாட்களில் 1800% அதிகரிப்பு

தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம், “அரசாங்கம் கொரோனா இரண்டாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் நேரடி விளைவு தான், இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதி தீவிரமாக பரவியதற்கு காரணம்” என்று கூறியுள்ளது.

கொரோனா பரவலை எதிர்த்து போராடுவதற்கான நடவடிக்கைகள் – அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

”கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை பிப்ரவரி நடுப்பகுதியில் மிகவும் குறைந்த நிலையில், கொரோனோ நோய்த்தொற்றை வென்றெடுத்து விட்டதாக இந்திய அரசாங்கம் சிறுபிள்ளைத்தனமாக முன்முடிவு செய்தது, இந்திய அரசு, அதிகாரிகள், திட்டம் வகுப்பவர்கள் ஊடகங்களின் துணையுடன் வெற்றிகளை கொண்டாடி கொண்டிருந்தனர்” என்று தி நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

‘கொரோனா பாதித்த மத்திய படையினரை திரும்ப பெறுக’ – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ள மம்தா பானர்ஜி

ஆஸ்திரேலியாவின் முன்னணி பத்திரிகையான தி ஆஸ்திரேலியன் ”ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள் தட்டுப்பாடு தொடர்பாக பல்வேறு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்த சூழலிலும், பாஜக அரசு கும்பமேளா போன்ற மத நிகழ்வுகளுக்கு அனுமதியளித்தது, பிரதமர் தலைமையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் (முகக்கவசம் அணியவில்லை) கூடிய தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்றது” என்று தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் – கொலைகுற்றமும் சுமத்தலாம் என்று நீதிமன்றம் கருத்து

”ஆணவம், அதீத தேசியவாத சிந்தனை, அதிகாரிகளின் இயலாமை போன்றவையே இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டதற்கான காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறும் வேளையில், பிரதமர் ஒளிந்துக் கொண்டு பொது மக்களை தவிக்க விட்டுவிட்டார்” என்று பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளது.

‘பெல், எண்ணூர் ஆலைகள் இருக்க, வேதாந்தாவிற்கு மட்டும் அனுமதி என்பது மக்கள் விரோதம்’ – பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்

அமெரிக்காவில் வெளியாகும் தி வாஷிங்க்டன் போஸ்ட், ”ஆயிரக்கணக்கான மக்கள் மைதானத்தில் கிரிக்கேட் விளையாட்டுக்களைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன, அரசாங்கம் கும்பமேளா போன்ற மத வழிபாடுகளுக்கு அனுமதியளித்தது” என இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், ”இந்தியாவில் நடப்பத்து தொலைதூர நாட்டின் பிரச்சனை அல்ல. ஒரு கொள்ளை நோய்த்தொற்று பரவலின்போது நேரம், காலம், இடம் ஆகியவற்றை கருத்தில் கொள்ள கூடாது, அனைத்துமே நமக்கு அருகில் இருப்பவை தான்” என்றும் தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்