Aran Sei

கொரோனா தடுப்பு மருந்துமீதான காப்புரிமைக்கு விலக்கு- அமெரிக்காவை தொடர்ந்து ஜரோப்பிய ஓன்றியம் ஆதரவு

கொரோனா தடுப்பு மருந்து மீதானக் காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எளிமைப்படுத்தவுள்ளதாக அறிவித்த அமெரிக்க அரசின் முடிவோடு பிரான்ஸ் நாடும் கைகோர்த்திருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கண்டுபிடிப்புகளுக்கான பெருமையில் பங்கு கொடுக்காத எடிசன் – 1093 காப்புரிமைகள் பதிவு செய்தவர்

கொரோனாவைக் கட்டுபடுத்த வளரும்நாடுகள் அதிகளவிலான தடுப்புமருந்துகள் பெறும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக வர்த்தக அமைப்பு (WTO) விதிகளின் கீழ், தடுப்பு மருந்து மீதான அறிவுசார் சொத்து பாதுகாப்புகளைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும்  முன்வைத்த யோசனையை அமெரிக்க அரசு ஆதரித்தது.

எக்ஸ்ரே கண்டுபிடித்த ராண்ட்ஜென் – நோபல் தொகையை ஆய்வுக்கு அர்ப்பணித்த, காப்புரிமையை எதிர்த்த மக்கள் விஞ்ஞானி

ஆனால், அமெரிக்க அரசின் அந்த முடிவுக்கு, பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்தும், வளர்ந்த நாடுகளிடமிருந்தும் ஏதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் ஜரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் முடிவுக்கு ஆதரவளித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், அறிவுசார் சொத்து பாதுகாப்பினை தள்ளூபடி செய்வதற்கு ஆதரவளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

உய்குர் இஸ்லாமியர்களை கண்டறியும் தொழில்நுட்பம் – போட்டி போட்டுக்கொண்டு காப்புரிமை பெறும் சீன நிறுவனங்கள்

தடுப்பு மருந்து மீதான இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், 27 நாடுகள் அமெரிக்காவின் இந்த முன்மொழிவு பற்றி பேசத் தயாராக இருப்பதாக தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகளவில் கொரோனா தொற்றைக் கட்டுபடுத்த அமெரிக்க அரசின் இந்த முடிவு  குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் உர்சுலா வான் டெர் கூறியுள்ளார்.

இதேபோன்று, கொரோனா தடுப்பு மருந்துக்கு காப்புரிமையில் இருந்து விலக்களிக்கும் முடிவுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினும் ஆதரவளித்துள்ளார்.

Source: Reuters

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்