Aran Sei

கைதிலிருந்து இடைக்கால பாதுகாப்பு – பாஜக தலைவர்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம்

Image Credits: New Indian Express

மேற்கு வங்கத்தில், பாஜக கட்சியின் தேசிய துணைத் தலைவர் முகுல் ராய், நாடாளுமன்ற உறுப்பினர்களான கைலாஷ் விஜயவர்ஜியா மற்றும் அர்ஜுன் சிங் உள்ளிட்ட ஐந்து தலைவர்கள் மீது குற்ற வழக்கு பதிவாகியுள்ளது. தற்போது, ஐந்து பாஜக தலைவர்களையும் கைதிலிருந்து காப்பாற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால பாதுகாப்பு வழங்கியுள்ளது. எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் நடவடிக்கைகளிலிருந்து தடுத்து நிறுத்துவதற்காகக் குற்ற வழக்குகளைப் பதிவுசெய்துள்ளதாக பாஜக தலைவர்கள் ஐந்து தனித்தனி மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, இந்த மனுக்களுக்கு மேற்கு வங்க அரசிடம் பதில் கோரியுள்ளது. அவர்கள் மீதான வலுக்கட்டாய நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையிலான பாதுகாப்பு அடுத்த விசாரணை வரை தொடரும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அர்னாப் கோஸ்வாமிக்கு முன்னுரிமை – 6 மனுக்களை ஒரே வாரத்தில் விசாரித்த உச்சநீதிமன்றம்

டிசம்பர் 16-ம் தேதி, திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுவேந்து ஆதிகாரி தனது கட்சியை விட்டு வெளியேறி மேற்கு வங்காள ஆளுநர் ஜகதீப் தங்கருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். சுவேந்து ஆதிகாரி மேற்கு வாங்க முதல்வரை வெளிப்படையாக விமர்சிப்பது அனைவரும் அறிந்த ஒன்று என தி வயர் கூறியுள்ளது. எனவே, அவர் எழுதிய கடிதத்தில் பதிலடி கொடுக்கும் விதமாக தன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமோ எனும் அச்சத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். சுவேந்து ஆதிகாரி விரைவில் பாஜகவில் சேரப்போவதாக வதந்தி பரவியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான 140 மனுக்கள் – உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன

இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் விசாரிக்கவுள்ளது.

முகுல் ராய், கைலாஷ் விஜயவர்ஜியா மற்றும் அர்ஜுன் சிங் ஆகியோரை பாஜக தலைவர்களான சவுரவ் சிங் மற்றும் பவன் குமார் சிங் ஆகிய இருவர் மேற்கு வங்கத்தில் தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் பாதுகாப்புக்காக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு கிடையாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்க பாஜக தலைவர் கபீர் சங்கர் போஸூம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளார். அதில், அவரது பாதுகாவலர்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையைச் சமர்பிக்குமாறும் உச்ச நீதிமன்றம் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்