சீருடை முறை அமலில் உள்ள கல்லூரிகளில் மட்டும் தான் மாணவர்களுக்கு மத ரீதியிலான ஆடைகள் அணிய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும், ஆசிரியர்களுக்கு அல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஹிஜாப் சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை, சீருடை முறை அமலில் உள்ள கல்லூரிகளில் மத ரீதியிலான ஆடைகள் அணியக் கூடாது என்று கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் படிக்கும் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மாணவிகளின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், கல்லூரி ஆசிரியர்களின் ஹிஜாபை கூட கழற்றுமாறு கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ள சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய போது, ஹிஜாப் தொடர்பான இடைக்கால உத்தரவு கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை இந்த வாரத்திலேயே முடிக்க விரும்புகிறோம், இந்த வழக்கை இந்த வார இறுதிக்குள் முடிக்க அனைத்து தரப்பினரும் முயற்சி மேற்கொள்ளுங்கள் என்று கர்நாடக தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி கூறியுள்ளார்.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.