கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில், சாதி கடந்து காதல் செய்த இணையரை பெண்ணின் குடும்பதினர் ஆணவக்கொலை செய்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தானில் ஆணவக்கொலை – பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையும் மீறி நடந்துள்ள பயங்கரம்
இதுகுறித்து தெரிவித்துள்ள அப்பகுதியின் காவல் கண்கணிப்பாளர் அனுபம் அகர்வால், சலடஹள்ளி பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் மடார் சமூகத்தைச் சார்ந்த பசவராஜ் மடிவல்லபா மற்றும் கானாபுர் பகுதியைச் சார்ந்த பசவராஜந்த் தாவல்பி பந்தகிசாப் தம்பாட் ஆகிய இருவரும் பெண்ணின் தந்தை மற்றும் அவரது குடும்பத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
மேலும், இந்தச் சம்பவம்குறித்து தெரிவித்த பசவராஜின் தம்பி, “அவர்கள் எங்களையும், எங்கள் வீட்டையும் எரித்து விடுவதாக மிரட்டினார். நாங்கள் தடுக்க முயன்றபோது அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். அவர்கள் குடும்பத்தில் உள்ள 2 பெண்கள், மூன்று ஆண்களில் ஒருவர் தான் இந்தக் கொலையில் சம்மந்தப்பட்டிருக்கிறார்.” என்று கூறியுள்ளதாகவும் என்.டி.டி.வி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள காவல் கண்கணிப்பாளர் அனுபம் அகர்வால், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள்மீது வழக்கு பதியப்பட்டுள்தாகவும், பெண்ணின் குடும்பத்தினர் தற்சமயம் தலைமறைவாக உள்ளதாகவும், மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.