Aran Sei

சாதி மறுப்பு திருமணம்: மூன்று மாத கர்ப்பிணிக்கு வலுகட்டாயமாக கருக்கலைப்பு

மிழகத்தில், சாதி மறுப்பு திருமணம் செய்த மகளுக்கு கருக்கலைப்பு செய்த பெற்றோரை மகளிர் காவல்துறை கைது செய்துள்ளது.

சேலம் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த, சுப்ரமணி மற்றும் செல்வியின் மகள் ரேணுகாதேவி. இவர் ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார் .

கடந்த ஜூலை மாதம் கொரோனா ஊரடங்கின் போது வீட்டில் இருந்த அவருக்கு செல்போன் மூலமாக ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை சேர்ந்த கணேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதை அறிந்த ரேணுகாதேவியின் பெற்றோர் இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

ஆரோக்கியத்தை கொடுக்கும் சாதி மறுப்பு திருமணம் – மரபணு ஆய்வு முடிவு

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள், பெண்ணின் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஆகஸ்ட் மாதம் திருப்பூருக்கு சென்று திருமணம் செய்து கொண்டுள்ளனர் . இதையறிந்த பெண்ணின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். ஆனால், ரேணுகாதேவி தன்னுடைய பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார்.

மதமாற்ற தடைச் சட்டம்: யோகி ஆதித்யநாத் அரசுக்கு சவாலாக விளங்கும் அலகாபாத் உயர்நீதி மன்றம்

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் ரேணுகாதேவி மற்றும் அவரது கணவர் கணேசனை சிறுவாச்சூர் அழைத்து வந்த பெண்ணின் பெற்றோர் ஜாதகம் சரியில்லை என்று கூறி இருவரையும் பிரித்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் . இந்தச் சம்பவத்தையடுத்து, கணேசன் தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறை இருவரையும் மீட்டுச் சென்று ராமநாதபுரத்தில் விட்டு வந்துள்ளனர்.

எத்தனை முறை சொல்வது – “திருமணத்தில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை” – அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம்

இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம், ரேணுகாதேவியின் தந்தை சுப்பிரமணிக்கு உடல்நிலை சரியில்லையென கூறி தாய் செல்வி மகள் ரேணுகாதேவியிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ரேணுகாதேவி கணவரிடம் சொல்லாமல் கடந்த 21 ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த ரேணுகா தேவி வலுக்கட்டாயமாக ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை தனது கணவரிடம் தெரிவித்ததோடு , சேலம் மாவட்ட தலைமை காவல் ஆய்வாளர் தீபா கணிகரிடமும் ரேனுகாதேவி புகார் அளித்துள்ளார் . ரேணுகாதேவி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகள் ரேணுகா தேவியை மீட்டு ஓமலூர் மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

உத்தர பிரதேசம் : இந்து முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்ய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம்

காவல்துறை நடத்திய விசாரணையில் ரேணுகாதேவியின் பெற்றோர்கள் மகளை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மகளிர் காவல்துறை கைது செய்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்