Aran Sei

பாஜக ஆட்சியில் ஒருமுறை கூட நடைபெறாத தேசிய ஒருமைப்பாட்டு குழுக் கூட்டம் – பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறதா பாஜக?

மோடி தலைமையிலான  பாஜக   ஆட்சிப்பொறுப்பை  ஏற்றதிலிருந்து  ஒரு முறை கூட தேசிய ஒருமைப்பாடு குழுக் கூட்டம் நடைபெறவில்லையென தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு குழு நாட்டில் நிலவும் வகுப்புவாதம், சாதியம், பிராந்தியவாதம் மற்றும் குழுவாதம் ஆகியவற்றிக்கு எதிராக நடவடிக்கைகள்  எடுக்க  அரசால் அமைக்கப்பட்ட உச்சபட்ச அதிகாரம் கொண்ட  குழுவாகும்.

‘என்னை தேசதுரோகியாக சித்தரிக்க லட்சத்தீவு நிர்வாகம் முயல்கிறது’ – காவல்துறையின் குற்றச்சாட்டிற்கு திரைக்கலைஞர் ஆயிஷா மறுப்பு

இந்நிலையில், இந்தக் குழுவின் கூட்டம் கடைசியாகக் கடந்த  2௦13 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  காங்கிரஸ்  தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியின்போது  நடைபெற்றுள்ளதாகவும், பாஜக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து  ஒரு முறைக் கூட இந்தக் கூட்டம் நடைபெறவில்லை என்றும்    அந்தச் செய்தியில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்துள்ள ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ,  “தேவைஇருப்பின் மட்டுமே  தேசிய ஒருமைப்பட்டு குழுக் கூட்டம் நடைபெறும். கூட்டம்  நடைபெறுவதற்கு குறிப்பிட்ட கால இடைவெளி என்பது கிடையாது.  எனினும், சமூக வன்முறைகள் மற்றும்  தேசிய ஒருமைப்பாடு பிரச்சனைகள் ஆகியவை அரசால் தொடர்ந்து  விவாதிக்கப்பட்டு வருகிறது.” என்றும் தெரிவித்துள்ளதாக  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவால் சுற்றுலாத் துறையில் 2 கோடி பேர் வேலையிழப்பு – மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தகவல்

 தேசிய ஒருமைப்பட்டு குழு  1962  ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 16 முறை மட்டுமே   இந்தக் குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

காஷ்மீர் மற்றும் பஞ்சாப் பிரச்சினை, ராம் ஜன்ம பூமி-பாப்ரி மஸ்ஜித் நில விவகாரம், ஊடகங்களின் பங்கு, சமமான வளர்ச்சி மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல், சிறுபான்மையினர் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய பிரிவினரிடையே பாதுகாப்பு உணர்வை ஊக்குவித்தல், பெண்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து  இதுவரை  இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டுள்ளன.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்