Aran Sei

தீய நோக்கமற்ற செயல்களால் மத உணர்வுகள் புண்பட்டால் அது குற்றமாகாது – திரிபுரா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

திட்டமிட்டு அல்லது தீங்கிழைக்கும் நோக்கமற்ற செயல்களால் மத உணர்வுகள் புண்படுமானால், அது இந்திய தண்டனைச் சட்டம் 295ஏ பிரிவின் கீழ் குற்றமாகாது என திரிபுரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிபதி அகில் குரேஷியின் தனிநபர் அமர்வு வழங்கிய தீர்ப்பில், ”இந்திய தண்டனை சட்டம் 295 ஏ பிரிவின் கிழ், மத உணர்வுகள் புண்படுத்தும் படியாக திட்டமிட்டு அல்லது தீங்கிழைக்கும் நோக்கமின்றி செய்யும் செயலைக் குற்றம் எனக் கூறவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் உணர்வுகளை வேண்டுமென்றோ அல்லது திட்டமிட்டோ புண்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயல் மட்டுமே குற்றமாகும் என அந்தப் பிரிவு கூறுகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குத் தொடுத்தப் பெண் எரித்து கொலை – பாலியல் வன்கொடுமை வழக்கில் பிணையில் வெளிவந்த நபரின் வெறிச்செயல்

பகவத் கீதை தொடர்பான முகநூல் பதிவால், இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டதாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்க மொழியில் பதியப்பட்ட பதிவு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது, அந்தப் பதிவு எந்த  ஒரு தரப்பினரையும் புண்படுத்தும் நோக்கில் பதியப்பட்டதல்லை என மனுதாரர் கூறியதாக, தி வயர் தெரிவித்துள்ளது.

நான் குற்றவாளி அல்ல, வருமான வரித்துறையை கண்டு அஞ்ச மாட்டேன் – நடிகை டாப்ஸி

மேலும் இது தொடர்பாக, 1957 ஆம் ஆண்டில் ராம்ஜி லால் – உத்திரபிரதேச அரசு இருவருக்கும் இடையிலான வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை, நீதிபதி மேற்கொள் காட்டியதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் நகைச்சுவை கலைஞர் முனாவர் பரூக் உள்ளிட்ட ஆறு பேர், அமேசான் பிரைமில் வெளியான தாண்டவ் இணையத் தொடரின் குழுவினர், கேரளாவை பூர்வீகமா கொண்ட டெல்லி ஊடகவியலாளர் சித்திக்  கப்பான் ஆகியோர் மீது இந்திய அரசியலமைப்பு சட்டம் 295 ஏ பிரிவின் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்