Aran Sei

சமூக இணையதள பயனர்களின் தகவல்கள் திருட்டு – ஆய்வில் வெளியாகி இருக்கும் தகவல்

ப்பிள் ஆப் ஸ்டோரில் இருக்கும் செயலிகளில் மூன்றாம் நபருக்கு தகவல்களை பகிரும் செயலிகளின் எண்ணிக்கை மற்றும் அளவு குறித்து பிகிளவுட் நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதில் ஆப் ஸ்டோரில் முதல் 100 இடங்களில் இருக்கும் செயலிகளில் 52 விழுக்காட்டிற்கும் அதிகமான செயலிகள் மூன்றாம் நபருக்குத் தகவல்களைப் பகிருவது தெரியவந்துள்ளது. தனிநபர் தகவல்கள், இணைய தரவுகள் தொடர்பான தகவல்கள், செல்போன் கருவி தொடர்பான தகவல்கள் இதில் அடங்கும் எனத் தெரியவந்துள்ளது.

அதிகபட்சமாக இன்ஸ்டாகிராம் செயலி மொத்த பயனாளர்களில் 80விழுக்காடு பயனார்களை பகிருகிறது. இதற்கு அடுத்த இடங்களை முகநூல், லிங்கிட் இன் செயலிகள் பிடித்திருக்கிறது. இந்த இரண்டு செயலிகளும் தங்கள் பயனாளர்களில் 50 விழுக்காடு பயனார்களின் தகவல்களைப் பகிருகிறது என பிகிளவுட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆட்சியர், காவல் ஆணையர் கட்சி சார்பாக செயல்படுவதாக புகார் – பணியிடமாற்றம் செய்த தேர்தல் ஆணையம்

80 விழுக்காடு நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கே தகவல்களைச் சேமிக்கின்றன என பிகிளவுட் குறிப்பிட்டுள்ளது.

சிக்னல், கிளப்ஹவுஸ், நெட்பிளிக்ஸ் ஆகிய செயலிகள் எந்த ஒரு தகவலையும் சேமிக்காத பாதுகாப்பான செயலிகள் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் டீம்ஸ், டெலிகிராம், கூகுள் கிளாஸ்ரூம், சூம் ஆகிய செயலிகளும் பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பிரமுகர் வாகனத்தில் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் – திருச்சியில் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

“இந்தச் செயலிகள் உங்கள் தகவலுக்குத் தீங்கிழைக்கும் வகையில்  எதையும் செய்யாது என்று நம்பலாம் என்றாலும், பல செயலிகளை அப்படி நம்ப முடியாது. எனவே உங்கள் தரவைச் சேமிக்க ஒரு பாதுகாப்பான இடம் இருப்பது முக்கியம், இதன்மூலம் உங்கள் அனுமதியின்றி யாரும் அதை அணுகுவதைத் தடுக்கப்படும்.”என பிகிளவுட் ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Source : The Hindu  

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்