Aran Sei

விவசாயிகள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறலுக்கு விசாரணை வேண்டும் – தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்

போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறலுக்கு வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யப்படும் என்கிறை பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (HRDA) வரவேற்றுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தேசிய செயலர் ஹென்றி திபாக்னே வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். விவசாயப் பொருளாதாரம் மற்றும் பலகோடி மக்களின் வாழ்க்கையை கடுமையாக அச்சுறுத்தும் வகையிலும் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இது அரசின் நடத்தை மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்துத்துவாவின் புதிய கண்டுபிடிப்பு ‘எச்சில் ஜிகாத்’ – உணவில் எச்சில் துப்பியதாக இஸ்லாமியர்கள் கைது

ஒரு வருடம் முழுவதும் விவசாயிகள் நடத்திய நாடு தழுவிய அமைதியான போராட்டம் தனித்துவமான சமகால எடுத்துக்காட்டு ஆகும். ஜனநாயகத்தில் கருத்து, கருத்து வேறுபாடு, சங்கம் அமைத்தல் ஒன்றுகூடல் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான மக்களின் கூட்டு உரிமையின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. கடுமையான வானிலை இருந்தபோதிலும், விவசாயிகள் ஒற்றுமையாக நின்று ஒன்றிய அரசை எதிர்த்துப் போராடினர். இது பாராட்டப்பட வேண்டியது.

உத்திரபிரதேசத்தில் லக்கிம்பூர் கெரியில் சமீபத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டது உட்பட, போராட்டங்கள் தொடர்பான சம்பவங்களில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் இது குறித்து பிரதமர் பேசத் தவறியது சற்று வேதனையான  ஒன்று.

“அப்பாவிகள் ரத்தம் சிந்துவது நிறுத்தப்பட வேண்டும்” – காஷ்மீர் பேரணியில் முழக்கம்

போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றிய அரசு திரும்பப் பெற்று, உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ₹25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்படி விவசாயிகளை வற்புறுத்தக்கூடாது, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று  ஹென்றி திபாக்னே தெரிவித்துள்ளார்.

ஜெய்பீம் பட விவகாரம் – சர்ச்சைக்கு பதிலளித்த இயக்குநர் த.செ.ஞானவேல்

விவசாயிகள் மீது பாதுகாப்புப் படை அதிக பலத்தை பயன்படுத்தியது, மாநில காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் துன்புறுத்தல்கள், போலியான எப்ஐஆர்கள், தன்னிச்சையான தடுப்புகள், சட்டவிரோத கைதுகள் மற்றும் போராட்டக்காரர்களை காவலில் வைத்து சித்திரவதை செய்தல் போன்ற அனைத்து சம்பவங்கள் குறித்தும் சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின்  தேசிய செயலர் ஹென்றி திபாக்னே தெரிவித்துள்ளார்.

Source : the hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்