Aran Sei

‘கொரோனாவை வென்றுவிட்டதாக பாஜக கூறிய பொய்யை நம்பியே, மக்கள் கும்பமேளாவில் பங்கேற்றனர்’ – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

credits : the indian express

கொரோனாவை வென்றுவிட்டதாக பாஜக அரசு கூறிய பொய்யை நம்பியே,  கும்பமேளாவில் மக்கள் பங்கேற்றனர் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்திர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசம், பீகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதற்கு கும்பமேளா தான் காரணம் என்று சொல்லப்படுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்தின் காப்புரிமை – இந்திய அரசு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு

“கொரோனாவை வெற்றி கண்டுவிட்டதாக பாஜக அரசு பொய்யாக அறிவித்துவிட்டது. அரசின் பொய்யை நம்பியே அப்பாவி மக்கள் கும்பமேளாவில் பங்கேற்றனர். ஆனால் உண்மை அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டுவிட்டது.” என்று அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“பாஜகவிற்கு தேர்தலைத் தவிர வேறு எதற்கும், திட்டமிட தெரியாது. இந்தியா கொரோனாவை வென்று விட்டதாக டாவோஸில் (உலக பொருளாதார மாநாட்டில்) வைத்துக் கூறியது. மேலும், 150க்கும் மேற்ப்பட்ட நாடுகளுக்கு உதவியது. ஆனால் இப்போது இந்தியாவின் நிலைமையைப் பாருங்கள், மற்ற நாடுகள், இந்தியாவிற்கு உதவிகளைப் புரிந்து வருகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.

Source; the hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்